சம்சாரம் அது மின்சாரம்  2 வரப் போகுதாம் – விசு ரோலில் ராஜ் கிரண்?

சம்சாரம் அது மின்சாரம் 2 வரப் போகுதாம் – விசு ரோலில் ராஜ் கிரண்?

'சம்சாரம் அது மின்சாரம் 2' திரைப்படம் உருவாகவுள்ளது. இதில் நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. நம் நாட்டில் அதிகமாக இருக்கு நடுத்தர குடும்ப உறவுகளை மையப்படுத்தி விசு இயக்கத்தில் வெளியான படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. 1986 ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ரகுவரன், லட்சுமி, மனோரமா, விசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.விசு மறைவுக்கு முன்பு 'சம்சாரம் அது மின்சாரம் 2' படத்துக்கான கதையை எழுதித் தயாராக வைத்திருந்தார். ஆனால், அதற்கான தயாரிப்பாளர் இன்னும் அமையவில்லை என்று 'கூட தெரிவித்திருந்தார். தற்போது அவருடைய மறைவுக்குப் பிறகு, 'சம்சாரம் அது மின்சாரம் 2' உருவாகிறது. மக்கள் அரசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை விசுவின் சிஷ்யர் வி.எல்.பாஸ்கர் ராஜ் இயக்கவுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் என அனைத்துமே விசு…
Read More
வில்லன் நடிகர் லிங்கேஷ் – நாயகன் ஆகிறார்!

வில்லன் நடிகர் லிங்கேஷ் – நாயகன் ஆகிறார்!

கபாலி, பரியேறும் பெருமாள் கஜினிகாந்த் குண்டு படங்களில் நடித்தவர் லிங்கேஷ். வில்லனாக பல படங்களில் நடித்தவர் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். மெட்ராஸ், கபாலி, ஜடா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும்போதே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றத்தை மாற்ற உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் செய்து அந்த கதாபாத்திரத்திற்காக ஈடுபாட்டுடன் நடித்திருப்பார். அறிமுக இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கும் படத்தில் முதன் முதலாக கதா நாயகனாக நடிக்கவிருக்கிறார் நடிகர் லிங்கேஷ். கதா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கல்லூரி மாணவர்களின் கதை என்பதால் உடல் எடையை குறைத்து கல்லூரி மாணவர்போல இருக்கவேண்டுமென்று இரண்டே மாதங்களில் பதினாறு கிலோ எடையை குறைத்திருக்கிறார். கலர்புல்லான அதே சமயம் சமூககருத்தையும் பேசுகிற கல்லூரி மாணவர்களின் வாழ்வில் நடக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாகவும், மாணவர்களின் இயல்பான வாழ்வில் நடக்கும் காதல் கொண்டாட்டம் சோகம் அனைத்தையும் பேசுகிற படமாகவும் இருக்கும். சமீபத்தில் இந்த படத்திற்கான போட்டோ ஷூட்…
Read More
கலகலப்பான குடும்பக் கதை ‘மிடில்கிளாஸ்’- விரைவில் ஷூட்டிங்!

கலகலப்பான குடும்பக் கதை ‘மிடில்கிளாஸ்’- விரைவில் ஷூட்டிங்!

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கி றோம். படங்களில் கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்ப பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது. அதிலும் குடும்ப படங்களில் முழுக்க காமெடி முன்னிலைப்படுத்தியது குறைந்தே விட்டது என்று கூறலாம். ஏனென்றால் குடும்பங்களில் தான் அவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருக்கும். அதைக் கதைக் களமாகக் கொண்டு நம்மை மகிழ்விக்க ஒரு கலகலப்பான குடும்பக் கதை ஒன்று தயாராகவுள்ளது. 'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். அவருடன் இணைந்து 'டோரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம். இவர் 'களவாணி' படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி 'இது வேதாளம் சொல்லும் கதை'…
Read More
திரௌபதி பட ஹிட்-டுக்கு பின் மோகன் G இயக்கும் படம் ” ருத்ர தாண்டவம்”!

திரௌபதி பட ஹிட்-டுக்கு பின் மோகன் G இயக்கும் படம் ” ருத்ர தாண்டவம்”!

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் " ருத்ர தாண்டவம்" . மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார். டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கி, மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தை உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு செய்கிறார்.பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார்.
Read More
பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் பட அறிவிப்பு!

பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் பட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர்தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத் திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா, இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நிரூபிக்க தயாராகியுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப் பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார். இக்கதைக்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். கதையைக் கேட்டவுடன், நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் பாபி சிம்ஹா. தமிழ்த் திரையுலகில் முக்கியமான படங்களின் பட்டியல்களை எடுத்துக்  கொண்டால், அதில் ‘அவள் அப்படித்தான்’, ‘கடலோர கவிதைகள்’ உள்ளிட்ட படங்கள் இடம் பிடிக்கும். அந்தப் படங்களின் கதைக்கு சொந்தக்காரரான இயக்குநர் K.ராஜேஷ்வரின் மகன்தான் விக்ரம் ராஜேஷ்வர். ‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘கடலோர கவிதைகள்’, ‘சீவலப்பேரி பாண்டி’ மற்றும் பல படங்களின் கதை, திரைக்கதை, வசனம்…
Read More
நடிகை வரலட்சுமி சரத்குமார் டைரக்ட செய்யப் போகும் ‘கண்ணாமூச்சி’!

நடிகை வரலட்சுமி சரத்குமார் டைரக்ட செய்யப் போகும் ‘கண்ணாமூச்சி’!

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் ‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணாமூச்சி’. இந்தப் படத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்கவிருக்கிறார் என்பது இன்றைய தினத்தில் தமிழ்த் திரையுல கத்தை அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியப்படவும் வைத்திருக்கும் ஒரு செய்தி. இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குநரும் இவர்தான். பல்வேறு மொழி திரைப்படங்களில் பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.  அவர் திரையில் இதுவரையிலும் ஏற்று நடிக்காத ஒரு வேடத்தை ஏற்று இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். புதுமையான திரைக்கதையையும் அமைத்து தனது முதல் படமாக இந்த ‘கண்ணாமூச்சி’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். ‘கண்ணாமூச்சி’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு தாங்கிய போஸ்டரை இன்று (18.10.2020 ஞாயிறு) காலையில்  அரசியல், சமூகம், விளையாட்டு மற்றும் திரை உலகை சார்ந்த பெண் பிரபலங்கள் பலரும் இணைந்து ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர்.…
Read More
’எறிடா’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

’எறிடா’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

ஒரு சில திரைப்படங்களின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்து விட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள வைக்கும். அப்படி சமூக வலைதளத்தில் சமீபமாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் போஸ்டர்தான் 'எறிடா'. எதற்கு இந்த தலைப்பு, என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆர்வமே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அரோமா சினிமாஸ், குட் கம்பெனி மற்றும் ட்ரெண்ட்ஸ் ஆட்பிலிம் மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த 'எறிடா' படத்தை பிரம்மாண்டமான செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் - வி.கே.பிரகாஷ், தயாரிப்பு - அஜி மிடாயில், அரோமா பாபு, வசனம் - ஒய்.வி.ராஜேஷ், ஒளிப்பதிவு - எஸ்.லோகநாதன், படத் தொகுப்பு - சுரேஷ் அர்ஸ்,…
Read More
சர்ச்சைகளைச் சட்டை செய்யாமல் முரளிதரனாக மாறும் விஜய் சேதுபதி!

சர்ச்சைகளைச் சட்டை செய்யாமல் முரளிதரனாக மாறும் விஜய் சேதுபதி!

ஒரு சினிமா படம் குறித்த அறிவிப்பே உலகளவில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்குவது ரொம்ப அபூர்வம். சர்வதேச அளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் சிலபல் அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்க்கி உள்ளது. அப்படித்தான் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது. முன்னொரு காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லபட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான். அப்போது அவருக்கு சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாக கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்குப் பிறகு அவரை வளரவிடாமல் தடுக்க தடைகள் வரும் போது, ஒவ்வொரு தடையையும்…
Read More
நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!

நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!

‘சுந்தர பாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் ‘கொம்பு வைச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் S.R.பிரபாகரன், தற்போது ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி ஒரு புதிய படத்தைத் படத்தை தயாரித்து அதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார். கிரைம் த்ரில்லராக உருவாகும் இந்த ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ் No 1’ படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். மேலும் நடிகர்கள் ஜெயபிரகாஷ் (JP), ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோர் அறிமுகமாகுகிறார்கள். தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - S.R.பிரபாகரன். தயாரிப்பு நிறுவனம் - பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ். ஒளிப்பதிவு - கணேஷ்…
Read More
காதல் கிரைம் த்ரில்லர் படத்தில் நடிக்க கமிட் ஆன ஜிவி பிரகாஷ்!

காதல் கிரைம் த்ரில்லர் படத்தில் நடிக்க கமிட் ஆன ஜிவி பிரகாஷ்!

எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம். அதிலும் காதலை மையப்படுத்திய த்ரில்லர் படம் என்றால் இளைஞர்கள் கொண்டாடித் தீர்பார்கள். 'அசுரன்' படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் 'சூரரைப் போற்று' பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியவை தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷை ஒரு முக்கிய இடத்துக்கு நகர்த்தி யுள்ளது. விரைவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள் இந்த இடத்தை மேலும் நகர்த்தும் என்பதை உறுதியாக நம்பலாம். தான் நடித்து வரும் படங்களின் பணிகளை ஒவ்வொனெறாக முடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவரது நடிப்பில் உருவாகும் அடுத்தப் படத்தின் பூஜை வளசரவாக்கத்தில் இன்று நடைபெற்றது. கொரோனா வழிமுறை பின்பற்றி இந்தப் படப்பூஜையில் அனைவரும் கலந்துக் கொண்டனர். பல்வேறு முன்னணி இயக்குநர் களிடம் பணிபுரிந்துவிட்டு, சில குறும்படங்கள் மற்றும் பல்வேறு முன்னணி படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட அகிலன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.…
Read More