அருவா சண்ட படப்பிடிப்பில் புது ஹீரோ ராஜாவுக்கு அருவா வெட்டு!

அருவா சண்ட படப்பிடிப்பில் புது ஹீரோ ராஜாவுக்கு அருவா வெட்டு!

  ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரித்து வரும் படம்  “அருவாசண்ட “ ஆதி ராஜன் எழுதி இயக்கும் இந்த படதின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வில்லன் ஆடுகளம் நரேனின்  மருமகனாக சொந்தர்ராஜா நடிக்கிறார். படத்தின் நாயகன் ராஜாவும், சொந்தர்ராஜாவும் அருவாவுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக் காட்சி நேற்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு தென்னந் தோப்பில் நடைபெற்றது. பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் இந்த சண்டைக் காட்சியை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக சௌந்தர்ராஜா வீசிய அரிவாள் ராஜாவின் தாடையில் வெட்டியது. அதில் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. படக்குழுவினர் பதட்டத்துடன் ஓடிச் சென்று ஐஸ்கட்டி வைத்து முதலுதவி செய்தனர். பின்பு ராஜாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அதன் பின்னரும் இருவரும் மோதும் சண்டைக்காட்சி எடுத்து முடிக்கப் பட்டது. இதனால் படப்பிடிப்பில் பெரும்…
Read More
125 விவசாய குடும்பங்களுக்கு சுமார் 70 லட்சம் நிதி உதவி செய்தார் நடிகர் தனுஷ்!

125 விவசாய குடும்பங்களுக்கு சுமார் 70 லட்சம் நிதி உதவி செய்தார் நடிகர் தனுஷ்!

சமீபத்தில் ராஜீவ் காந்தி 'கொலை விளையும் நிலம்' படத்தின் திரையிடலுக்கு இயக்குநர் சுப்பிரமணிய சிவா வந்தார். அந்த ஆவணப்படத்தைப் பார்த்ததோடு அதைப் பற்றி தனுஷிடமும் விவரித்திருக்கிறார். தமிழகத்தில் விவசாயிகளின் துயரம், தொடர் தற்கொலைகள் உள்ளிட்ட வற்றை கேள்விப்பட்ட தனுஷ், நாமும் ஏதாவது செய்யலாம் என்று உறுதியளித்தார். அதன்படி தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு 25 ஆயிரம் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.ஆனால், செய்வதைப் பெரிதாக செய்யலாம் என்று 50 ஆயிரமாக வழங்க முடிவு செய்திருக்கிறார். தனுஷின் முடிவை அறிந்த சுப்பிரமணிய சிவா, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினரின் தகவல்களை திரட்டி, அவர்கள் அனைவரையும் தனுஷுன் சொந்த ஊருக்கு வரவைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 50 ஆயிரமாக வழங்கி, அவர்கள் அனைவரது போக்குவரத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்நிகழ்ச்சியில் தனுஷின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளார்கள். 'கொலை விளையும் நிலம்' ஆவணப்படம் முழுமையாக விவசாயிகளின் தற்கொலை மற்றும் அவர்களுடைய…
Read More
கூத்தன் படத்தில் ரம்யா நம்பீசன் பாடல்!

கூத்தன் படத்தில் ரம்யா நம்பீசன் பாடல்!

"பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இந்த பாடலை பாடிய நடிகை "ரம்யா நம்சபீன்" பாண்டிய நாடு படத்திற்கு பிறகு "கூத்தன்" என்ற திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தற்போது "கூத்தன்" இத்திரைப்படம் ஒரு நடன கலைஞர்கள் வாழ்க்கையும் துணை நடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் பின்னணியில் எடுக்கபடுகின்ற திரைப்படமாகும். ஹீரோவாக களம் இறங்கும் நடிகர் "ராஜ்குமார்" இவருக்கு வில்லனாக (பிரபுதேவா தம்பி) "நாகேந்திர பிரசாத்" நடிக்கிறார். ஹீரோயினாக "ஸ்ரீஜீதா", "கிரா" மற்றும் "சோனா" புதுமுக நாயகிகள் நடிக்கின்றனர்கள், இதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் "AL.வெங்கி" "சூரன்" மற்றும் பல கன்னட படங்களில் இசையமைப்பாளரான "பாலாஜி" இசையமைக்க துள்ளவைக்கும் குத்து கலந்த கவிஞர் "விவேகா" வரிகளில் "ஓடு ஓடு காதல் காட்டு மிராண்டி" என்ற பாடலை நடிகை மற்றும் பாடகியான "ரம்யா நம்பீசன்" நேற்று பாடினார். "ரம்யா நம்பீசன்" அவரது…
Read More
விவேகம் – ஆகஸ்ட்  24 ரிலீஸ்!

விவேகம் – ஆகஸ்ட் 24 ரிலீஸ்!

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜீத் நடித்துள்ள படம் விவேகம். பிரமாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அஜீத்துடன் பாலிவுட் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, சென்சாருக்கு விண்ணப்பித்தி ருந்தார்கள். இந்த சென்சார் முடிந்தவுடன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டது. இதனிடையே ‘விவேகம்’ வெளியீட்டு தேதிக்காக பல்வேறு திரைப்படங்கள் தங்களது வெளியீட்டை இறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள். ஒரு வழியாக இன்று (ஜூலை 31) காலை தணிக்கை அதிகாரிகள் ‘விவேகம்’ படத்தைப் பார்த்து சண்டை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தற்போது ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது இதர படங்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே ஆகஸ்ட் 2-ந்தேதி அஜீத் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 25…
Read More
50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் ‘நெடுநல்வாடை’!

50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் ‘நெடுநல்வாடை’!

பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் "நெடுநல்வாடை". மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. ஆனால், அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அப்படியான ஒரு கிராமத்து வாழ்வியலை, ஒரு தாத்தா பேரன் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்தான் "நெடுநல்வாடை". நெல்லை மாவட்டத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மைக் கதை இது. மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக 'பூ ராமு' நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கிழக்குச் சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார், தென்மேற்குப் பருவக்காற்று போன்ற கிராமத்துப் படங்களின் வரிசையில் இந்தப்படமும் நிச்சயம் இடம்பெறும். ” இந்தப்படத்தை, என்னுடன் நெல்லை, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த என் நண்பர்கள் 50 பேர் இணைந்து…
Read More
‘நெஞ்சம் மறப்பதில்லை’ வெளியீட்டுக்காக காத்திருப்பதில்  வெறுப்பா? ரெஜினா

‘நெஞ்சம் மறப்பதில்லை’ வெளியீட்டுக்காக காத்திருப்பதில் வெறுப்பா? ரெஜினா

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவா கியிருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது ரிலீஸூக்கு தயாராகி விட்ட இந்த படம் ஒரு இருண்ட படமாக இருக்கும் என்றும், அந்த வகையில் தமிழில் முதல் முயற்சியாக அது இருக்கும் என்றும் நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார். மேலும் படம் பற்றி அவர் கொஞ்சம் விவரித்த போது, " 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியீட்டுக்காக காத்திருப்பது வெறுப்பாக இல்லை. ஒவ்வொரு முறை வெளியீடு தேதி அறிவிக்கும்போதும், முதல் முறை அறிவிப்பின் போது இருந்தது போல எனக்குள் அதே ஆர்வம் இருக்கிறது. நான் ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு படம் அது. பேய் படமோ, மர்மப் படம் என்றோ சொல்ல முடியாது. இருண்ட படம் என்று சொல்லலாம். அந்த வகையில்…
Read More
ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம்! – தரமணி வசந்த் ரவி

ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம்! – தரமணி வசந்த் ரவி

புரொடியூசர்கள் மற்றும் ஃபெப்சி தொழிலாளரகள் மோதல் போக்கால் படு சூடாகி உள்ள கோலிவுட்டை மேலும் சூடாக்குவது போல் ஆகஸ்ட் 11-ம் தேதி 'தரமணி' வெளியீடு என்று படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. அதிலும் இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளார்கள். இதனை மையமாக வைத்தே படக்குழு தொடர்ச்சியாக போஸ்டர்கள் மற்றும் டீஸர் வழியாக சாடியுள்ளது. இதனிடையே இப்படத்தின் தணிக்கையில் என்ன நடந்தது என்பது குறித்து இயக்குநர் ராம் விளக்கிய போது, “இன்றைய நவீன இளைஞனும், யுவதியும் காதலை எப்படி பார்க்கிறார்கள், காதலிக்கிறார்கள், காதலை எப்படி புரிந்து கொள்கிறார்கள், காமத்தை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. இன்றைய நவீன யுவதி பற்றிய கதை என்பதால், மதுகுடிப்பவராக இருக்கும்போது அதைக் காட்டியுள்ளேன். தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் தராவிட்டாலும் கேட்டு வாங்கியிருப்பேன். காமத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும் 13 வயது நிரம்பாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது இளைஞர்களுக்கான…
Read More
கும்கி 2 ஹீரோயின் அதிதி மேனன் – ஆகஸ்டில் ஷூட்!

கும்கி 2 ஹீரோயின் அதிதி மேனன் – ஆகஸ்டில் ஷூட்!

கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸானது விக்ரம் பிரபு – லக்ஷ்மி மேனன் நடிப்பில் ’கும்கி’. பிரபு சாலமன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் வசூல் மழை பொழிந்தாக கூறப்பட்டது. இதில் தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதனிடையே ‘தொடரி’ படத்தைத் தொடர்ந்து, ‘கும்கி 2’ படத்துக்கான நாயகியின் தேர்வில் கவனம்செலுத்தி வந்தார் இயக்குநர் பிரபு சாலமன். முதலில் நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானி ஒப்பந்தமாவதாகத் தகவல் வெளிவந்தது. ஆனால், அச்செய்தி வதந்தி எனத் தெரிவித்த பிரபு சாலமன் நாயகியைத் தேர்வுசெய்து வருவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘கும்கி 2’ படத்துக்குக் நாயகியாக அதிதி மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். ‘பட்டதாரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி மேனன், தற்போது அமீர் இயக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பல நாயகிகள் தேர்வுக்குப் பிறகு,…
Read More