வி.ஐ.பி. 2 மட்டுமில்லே மூணு, நாலு கூட வரும்! – தனுஷ் நம்பிக்கை

வி.ஐ.பி. 2 மட்டுமில்லே மூணு, நாலு கூட வரும்! – தனுஷ் நம்பிக்கை

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி -2 படத்தில் தனுஷ் மற்றும் கஜோல் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் வி.ஐ.பி முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்ற மாதம் 25 ஆம் தேதி மும்பையில் மிக பிரம்மண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில் படத்தின் டிரெய்லர் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் தனுஷ், கஜோல், சமுத்திரகனியுடன் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னா, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் பரந்தாமன் உள்ளிட்ட பலரும்…
Read More
ஹோலிவூட் ஸ்டண்ட்  மாஸ்டர் கைவண்ணத்தில் தயாராகும் ‘இமைக்கா நொடிகள்!’

ஹோலிவூட் ஸ்டண்ட் மாஸ்டர் கைவண்ணத்தில் தயாராகும் ‘இமைக்கா நொடிகள்!’

எந்த வேடம் ஏற்றுக கொண்டாலும் அந்த பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு தனக்கான பெயரை ஈட்டிக் கொள்வதில் அதர்வா சமார்த்தியகாரர் என்று திரை உலகினர் பாராட்டி வருவதுண்டு. ஒரு action ஹீரோவுக்கு உரிய கட்டுமஸ்தான உடலமைப்பு, குரல் வளம், நடிப்பு திறன் மற்றும் தோற்ற அமைப்பு கொண்ட அதர்வா தற்போது நடித்து வரும் இமைக்கா நொடிகள்" படம் மூலம் ஒரு முழுமையான action ஹீரோ உரு எடுப்பார் என பெரிதும் நம்புகிறது திரை உலகம். கேமியோ பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பில் சி ஜே ஜெயக்குமார் தயாரிக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவர் டிமோண்ட்டி காலனி , திரைப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதர்வாவுக்கு இணையாக நடிப்பவர் புது முகம் ராஷி கண்ணா.பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மிக முக்கிய வேடத்தில் நடிக்க…
Read More
முதல்ல நீங்க மாறுங்கப்பூ! – டாப் நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்!

முதல்ல நீங்க மாறுங்கப்பூ! – டாப் நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்!

 ஏற்கெனவே மத்திய அரசின் ஜி எஸ் டி வரி வந்த சினிமா டிக்கெட்டுகளுக்கு தமிழக அரசு 30 சதவீத கேளிக்கை வரி விதித்ததற்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் கேளிக்கை வரியை ரத்து செய்யம்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந் நிலையில் நடிகையும், சினிமா டைரக்ட ருமான லட்சுமி ராமகிருஷ்ணன் திரையுலகினரின் போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டு உள்ளார். அதாவது “திரைப்படத் தொழிலை வியாபாரமாக பார்த்தால் எதற்காக வரிவிதிப்புகளை எதிர்க்க வேண்டும்..? நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி கொடுத்து விட்டு வரிவிலக்கு கேட்க வேண்டுமா…? வரி கட்டுபவர்கள் அரசாங்கத்தின் வீண் செலவுகளை கேள்வி கேட்பார்கள். படம் 100 கோடி ரூபாய் வசூலித்து விட்டது என்கிறார்கள். இதற்காக கோடிகளில் விளம்ப ரமும் செய்கிறார்கள். நடிகர்கள் சம்பள தொகையை ஏற்றுகிறார்கள். அதன் பிறகும் வரி விலக்கு கேட்டு…
Read More
‘பப்ளிக் ஸ்டார்’  துரை சுதாகர் நடிக்கும் ‘தப்பாட்டம்’.

‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிக்கும் ‘தப்பாட்டம்’.

தமிழகத் தோல் இசைக் கருவிகளில் மிக முக்கியமானது பறை. பறை ஆட்டம், தப்பாட்டம் என இரு பெயர் தாங்கிய பறை இசை, வடிவ மாற்றங்களால் உரு மாறினாலும் சங்க காலம் முதல் சம காலம் வரை அழிவின்றி அதிரோசை எழுப்பிக்கொண்டிருக்கிறது.  தப்பு என்ற இசைக்கருவியை இசைத்துக்  கொண்டு ஆடப்படும் ஆட்டம் என்பதால், தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கலையைப் ‘பறையாட்டம்’ என்றும் அழைக்கிறார்கள். ‘பறை’ என்ற இசைக் கருவியைத்தான் ‘தப்பு’ என்றார்கள். இதை மாட்டுத்தோலில் செய்கிறார்கள். மரக் கட்டையால் செய்யப்பட்ட வட்ட வடிவ சட்டத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை ஒட்டி பறை செய்யப்படுகிறது. இவ்வாறு ஒட்டு வதற்குப் புளியங்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பசையைப் பயன்படுத்துகி றார்கள். இந்தக் கலையை நடத்துகிறவர்களே பறையைத் தயார் செய்து கொள்கிறார்கள். பறையை அடிப்பதற்கு மூங்கில் குச்சியைப் பயன்படுத்துகிறார்கள். இதைச் சிம்புகுச்சி அல்லது சிம்படி குச்சி என்று அழைக்கிறார்கள். தப்பு அடிக்கும் கலைஞர்கள் இந்தக் குச்சியை இடது கையில் வைத்திருப்பார்கள். பூவரசு…
Read More
இவன் தந்திரன் & வன மகன்  ரீ- ரிலீஸ் குறித்த பிரஸ் மீட்!

இவன் தந்திரன் & வன மகன் ரீ- ரிலீஸ் குறித்த பிரஸ் மீட்!

கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதர வோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் மாநில அரசு தனியாக 30 சதவீத கேளிக்கை வரியை தமிழ் சினிமா மீது விதித்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3ஆம் தேதி முதல் காலவரைய ரைன்றி மூடப்பட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி அனைத்து தமிழ் சினிமா சங்கங்க ளும் தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திரையரங்குகள் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று நாளை திரையரங்குகளை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேச வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் அழகப்பன், கௌதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் கண்ணன்,…
Read More
எல்லா தியேட்டர்களையும் 3 டியா மாத்தணும் – லைகா அட்வைஸ்!

எல்லா தியேட்டர்களையும் 3 டியா மாத்தணும் – லைகா அட்வைஸ்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் ‘2.0’ ஆகும். 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் லைகா நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அதாவது ரஜினியின் ‘2.0’ படத்தை 3டி-யில் ரிலீஸ் செய்தால் மட்டுமே தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு லாபம் கிடைக்கும். அதனால் அனைத்து திரையரங்கையும் 3டி-யில் மாற்றுவது குறித்துதான் இப்போதே பேசத்தொடங்கியிருக்கிறது லைகா நிறுவனம். இந்நிகழ்வில் ராஜூ மகாலிங்கம் பேசியதாவது: "400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம், முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.“டால்ஃபி அட்மாஸ், க்யூப் எனப் பல டெக்னாலஜிகளை ரசிகர்களுக்காக அப்டேட் செய்தது போல, 3டியும் இனி திரையரங்கில்…
Read More
வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும்? – ’நான் யாரென்று சொல்’ விழாவில் விக்ரமன் கேள்வி!

வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும்? – ’நான் யாரென்று சொல்’ விழாவில் விக்ரமன் கேள்வி!

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு "நான் யாரென்று நீ சொல்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார்.கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார்.அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள். எடிட்டிங் : பிரேம் பாடல்கள் : இளையகம்பன் ஸ்டண்ட் : பம்மல் ரவி இசை : ஜான் பீட்டர் ஒளிப்பதிவு : பாஸ்கர் நடனம் : ரவிதேவ் தயாரிப்பு : R.மணிமேகலை எழுதி இயக்கி இருப்பவர் - A.M.பாஸ்கர் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் விக்ரமன் ".நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன்.மற்ற விஷ யங்களை பேச மாட்டேன்.ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது. நேற்றும் இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது சினிமாவுக்கு பெரும்  இழப்பு. ஜி.எஸ்.டி 28 % இது தவிர மாநில வரி 30% இது இல்லாமல் மாநிலம் வசூலிக்கும்…
Read More