15
Feb
சேரன், பிரசன்னா நடிப்பில் வெளியான ‘முரண்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் ராஜன் மாதவ். அடுத்ததாக விதார்த், ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, அசோக் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு முன்னதாக ‘உலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை விளம்பரப்படுத்து வதற்காக, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோவை வைத்து வீடியோ பாடல் ஒன்றும் படம் பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை முடித்தும் ஆண்டுக் கணக்கில் வெளியிட சூழ்நிலை சரியாக அமையாத நிலையில், தற்போது படத்தின் தலைப்பை மாற்றி உள்ளனர். ‘உலா’ என்ற தலைப்பை கடாசி விட்டு, ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற டைட்டிலுடன் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் . 48 மணிநேரங்களில் நடக்கும் நான்கு வெவ்வேறு கதைகளின் இணைப்பு தான் இதன் கதைக்களம். 2006 ஆம் ஆண்டு வெளியான…
