சார்லி சாப்ளின் 2 – ரிவியூ!

சார்லி சாப்ளின் 2 – ரிவியூ!

உள்ளங்கையில் உலகை கொண்டு வந்து விட்டது செல்போன். அதே சமயம் அதில் உள்ள வாட்ஸ் அப் என்னும் தண்ணி இல்லாத கிணற்றுக்குள் விழுந்து நீச்சல் அடிப்பது போல் பாவனை செய்பவர் கள் அதிகாம்கி விட்டதும் அப்படியான பலருக்கு அந்த வாட்ஸ் அப்-பே பெரிய ஆப்பாக திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதும் தெரியுமா?ஆம்… இந்த வாட்ஸ் அப் பயன்பாடு காரணமாக மணமுறிவு ஏற்படுவது, திருமண பந்தங்கள் விலகுவது,, விவாகரத்தும் அதிகமாக நடக்கிறது என்றும் பல்வேறு உறுதிப்படுத்தப் பட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிலும் அதிகமான விவாகரத்து வழக்கு களில் மிக முக்கிய வில்லன் இந்த ‘வாட்ஸ் அப்’ குறுஞ்செய்திகள்தான் என்பதும் உண்மையாக்கும் . இப்போதெல்லாம் இந்த ஓசி என்ற பெயரில் அதிகமாகப் புழங்கும் வாட்ஸ் அப் மூலமாக ஒருவருக்கொருவர் அன்பை மட்டுமின்றி ஆபாச வசவுகள் மற்றும் பலான படங்கள் அனுப்புவதும் கூட இப்போது சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் அதன் சீரியஸ்னெஸ் குறித்து கொஞ்சம் காமெடியாக…
Read More
விஸ்வாசம் – விமர்சனம்

விஸ்வாசம் – விமர்சனம்

நம்ம கோலிவுட் நாயகர்களின் டாப் லிஸ்ட்-டில் உள்ளவர்கள் நாலைந்து பேர்கள்தான். அவர்களும் ஆண்டுக்கு ஒரு படமோ அல்லது இரண்டு படமோ வழங்குகிறார்கள். அதையும் தன் மாஸ்-சைக் காட்டும் கதைக்களத்தை காட்டும் ஸ்கிரின் பிளேக்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள். இதிலும் ஓரிருவர் கதை களம் என்பதில் உள்ள கதையை சட்டை செய்யாமல் களத்தை மட்டுமே செலக்ட் பண்ணும் போக்கும் அதிகம். அதாவது ஓப்பன் பண்னா ஹீரோ எண்ட்ரி, அதைத் தொடர்ந்து ஹீரோ யின், கூடவே வில்லன், இந்த மூன்று கேரக்டர்களையும் கோர்த்துக் கட்ட கொஞ்சம் உதிரிப் பூக்கள் (நடிக/ நடிகைகள்), நாலு ஃபைட்டு, நாலு சாங், க்ளைமாக்சில் ஹீரோ ஜெயிச்சு சிரிச்சு ரசிகனை அனுப்பணும். இதுதான் பெரும்பாலான திரைப்படங்களின் திரைக் கதைச் சுருக்கம். அப்படியான ஒரு படமே ‘விஸ்வாசம்’. அதே சமயம் இதில் எக்ஸ்ட்ராவாக நம்மளோட கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், நம்ம குழந்தைகளோட எதிர்காலத்துல திணிக்க வேண்டாங்க. குழந்தைங்க வளரட்டுங்க, சந்தோஷமா, குழந்தைங்களாவே…
Read More
பேட்ட – விமர்சனம்!

பேட்ட – விமர்சனம்!

கிட்டத்தட்ட 35 வருடங்களாக கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காதவர். சுமார் 40 வருஷத்தில் கிட்டத்தட்ட 150 படங்கள் நடித்து முடித்து விட்டவர். அப்பேர் பட்ட ஒரு நாயகனின் அது எது எது -வை கொடுத்தால் யாருக்குப் பிடிக்கும் என்பதை உணர்ந்த ஒரு ரசிகன் இயக்குநராக வழங்கியுள்ள படைப்புதான் ‘பேட்ட’. ஆனால் பழைய ரஜினியைப் பார்க்க அவரின் பழைய படங்களைப் பார்த்தால் போதும் என்பதையும் ரஜினியிஸம் என்ற அவர் ஸ்டைல் களை காட்ட மெனக்கெட்ட ரசிகக் குஞ்சு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம்தான் பேட்ட. படத்தின் கதை என்ன? ஹலோ இது ரஜினி படம் படத்தில் யார் யாரெல்லாம் நடித்து இருக்கிறார்கள்? ஹலோ இது ரஜினி படம் கேமரா யாரு? எப்படி இருக்குது? ஹலோ இது ரஜினி படம் ஹீரோயின் உண்டு இல்லையா? ஹலோ இது ரஜினி படம் படத்தின் ஸ்பெஷல் என்ன? ஹலோ இது ரஜினி படம் இப்படி…
Read More
டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ் நடித்த ‘கேஜிஎஃப்’ திரைப்பட விமர்சனம்!

டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ் நடித்த ‘கேஜிஎஃப்’ திரைப்பட விமர்சனம்!

கூப்பிடுத் தூரத்தில் இருக்கும் கன்னட திரையுலகில் இருந்து நம்ம கோலிவுட்  சினிமாவுக்கு எத்தனையோ நடிகர், நடிகையர், பாடகர், பாடகி வந்து சாதித்த நிலையில் அந்த லிஸ்டில் ஒரு புதிய ஸ்டார் எண்ட்ரி ஆகி தனிக் கவனம் பெற்று விட்டார்.. ஆம். கர்நாடகத்தின் “டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ்” என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலியால் பாராட்டு பெற்ற யஷ் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம்தான் “K.G.F. Chapter 1″ இந்த K.G.F என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்திற் குள் போகும் முன் சில விஷயங்களை நினைப்படுத்திக் கொளவது நல்லது. கோலார் தங்க வயல். ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக இருந்தது. இந்தியாவின் மொத்தத் தங்க உற்பத்தியில் 95 சதவீதத் தங்கம் இங்குத்தான் கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங் களேன். கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்தக் கோலார் தங்கச் சுரங்கம் அமைக்கப் பட்டதில்…
Read More
கனா -பட விமர்சனம்!

கனா -பட விமர்சனம்!

சினிமாவில் கனா காட்சிகள் வருவது இயல்புதான்.. ஆனா கனா என்ற பெயரில் ஒரு சினிமா-வை அதுவும் கண்டவர்கள் அனைவரும் ஆசைப்படும் சினிமாவை எடுத்து அசத்தி இருக்கிறார்கள் சிவ கார்த்திகேயனும், அருண காமராஜும். இவர்கள் கண்ட கனாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற மட்டை கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் புராணம், காதல், பாசம், சண்டை, பகை, காமெடி, பேய் என்று எத்தனையோ வெரைட்டிக் கதைகள் எக்கச்சக்கமாக வந்த நிலையில் விளையாட்டை மையப்படுத்தி வந்த கதைகள் என்னவோ கொஞ்சம் குறைச்சல்தான். அதிலும் நீச்சல், ஹாக்கி, கபடி, குத்துச் சண்டை, கிரிக்கெட் என்று நாலைந்து விளையாட்டை மையப்படுத்திதான் வந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஓட்டப்பந்தயத்தில் சாதிக்கும் ஒரு ஏழை பெண்ணின் வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய படம் எதிர் நீச்சல்.விளையாட்டில் உள்ள அரசியலால் ஒரு வீராங்கனையின் கனவு எப்படி சிதைந்து போகிறது என்பதை விரிவாக பேசிய படமும் இது. ஒரு…
Read More
துப்பாக்கி முனை – விமர்சனம்!

துப்பாக்கி முனை – விமர்சனம்!

முதலிலேயே நடிகர் திலகம் பேரனுக்கு ஒரு பொக்கேயை நீட்டி சபாஷ் சொல்லி விடலாம்.. ஆம்.. விக்ரம் பிரபுவுக்கு பல படங்களுக்கு பிறகு பெருமையுடன் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு படமாக வந்திருக்கிறது இந்த துப்பாக்கி முனை. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிசராக இருக்கும் நாயகன் விக்ரம் பிரபு (பிர்லா போஸ்). தப்பு செய்பவர்களுக்கு மரணமே தண்டனை என்பதை ஆழமாக நம்பி அதன் வழி வாழ்வை நடத்திச் செல்கிறான். ஆனால் இப்படி உயிரை அழிக்கும் தொழில் செய்யும் ஒருவனுடன் இருக்க மாட்டேன் என பெத்த அம்மா நாயகனை விட்டு விலகி விடுகிறார், கூடவே இந்த கொலைகார வேலையை உதறிட்டு வந்து என்னை பார் என்று கறாராகச் சொல்லி காதலியும் பிரிந்து போய் விட ஒரு குழப்படி யான சூழலில் சஸ்பெண்ட் ஆகி தனிமையில் தவிக்கிறான் நாயகன். அப்போது அவனைத் தேடி வரும் ஒரு என்கவுண்டரில் குற்றவாளியின் உயிரைக் காக்க போராடுவது தான் கதை. ஒரு…
Read More
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – பட விமர்சனம்!

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – பட விமர்சனம்!

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு 60 வயது பெரிசு சொன்னது இது: “எங்க காலத்துலே வீட்டுக்கு வர்ற பத்திரிகைகளில் லிரில் சோப்பு விளம்பரம் வரும்..அதுலே நடிகைங்க டூ பீஸில் உள்ள படத்தை பார்த்தாலே கிளுகிளுப்பு அள்ளும்.. ஆனா இப்ப நெலமை வேற.. எதுவும் என்னதையும் கிளர்ச்சியூட்ட மாட்டேங்குது  இதே படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த ஒரு யங் பாய் சொன்னது : இப்பல்லாம் எந்த ஒரு விஷயத்தையும் ட்ரிபிள் மீனிங்-கில் சொல்றதுதான் ட்ரெண்டிங். இதுலே ஒரு மீனிங் மட்டும் படு செக்சியா இருக்கணும்.. அப்படி பேசினாத்தான் கேர்ள்-ஸூங்கிட்டே காபி ஷாப் போய் டைம் பாஸ் பண்ணலாம் இதனிடையே இந்த படத்தை பார்த்து விட்டு வந்த ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் சொன்னது ; கில்மா, கிளாமர், செக்ஸ் எல்லாம் கலந்த படம் எடுக்கிறது ரொம்ப கஷ்டம்.. ஏன்னா இப்ப ஆளாளுக்கு கையில் வைச்சிருக்கற செல்போனில் எல்லாத்தையும்…
Read More
லைகா,ஷங்கர் & ரஜினி கூட்டணியில் உருவான 2.0 பட விமர்சனம்!

லைகா,ஷங்கர் & ரஜினி கூட்டணியில் உருவான 2.0 பட விமர்சனம்!

கோலிவுட்டில் கடந்த 38 ஆண்டுகளாக ‘சூப்பர் ஸ்டார்’பட்டத்தைத் தக்க வைத்திருக்கும் ரஜினிகாந்த் மற்றும் பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த ஷங்கர் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் ‘2.0’. சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘எந்திரன்’ படத்தின் பார்ட் டூ-தான் இப்படம்.  ஒவ்வொரு படத்திற்கும் கதைக்கும் ஸ்கீரின் பிளேவுக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கும் ஷங்கர் இம்முறையும் வழக்கம் போல்  சோஷியல் மெசெஜ் ஒன்றினை  முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸை மட்டுமே நம்பி பிரமாண் டமாக கொடுத்திருக்கிறார். இதற்காக ஹை டெக்னாலஜியை அதிகம் கையாண்டிருப்பவர், ஆவி, அமானுஷய சக்தி, அறிவியல், விஞ்ஞானம் என்று கலந்துக் கட்டி கூட்டாஞ்சோறு சுவையில் ஒரு பக்கா விருந்தை படைத்திருக்கிறார். இந்தக் கூட்டாஞ்சோறில் சிலருக்கு பிடிக்காத காய்கறிகள் இருந்தாலும் பலருக்கும் பிடிச்ச பல்வேறு சுவைகள் இருப்பதென்னவோ நிஜம். படத்தின் ஆரம்ப காட்சியிலேயே செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி ஒரு ஆள் தூக்குப்…
Read More
காற்றின் மொழி –  விமர்சனம்!

காற்றின் மொழி – விமர்சனம்!

நம் சமுதாய அமைப்பில் கணவனும் மனைவியும் பெரும்பாலும் சம மதிப்புள்ளவர்களாகக் கருதப்படவில்லை. முதலில் மனைவியை விட கணவன் வயதில் மூத்தவன். அதுவே அதிகாரத் துக்கான முதல் தகுதியைத் தந்து விடுகிறதாம். அநேகமாக கணவன் அதிகமாகப் படித்தவன். மனைவியை விட உயர்ந்த பொறுப்பில் அல்லது வருவாய் ஈட்டுபவன். இவை யெல்லாம் கணவன் என்கிற இயற்கையான அதிகாரத்திற்குக் கூடுதல் வலு சேர்ப்பவை. இதற்கெல்லாம் மேலாக வீடு என்பதே கணவன் வீடாகவே கருதப்படுகிறது. பெண் இடம்பெயர்ந்து ‘வந்தவள்’. அவள் பெயரே இறுதி வரை ‘வந்தவள்’தான். அதனால் இந்த அமைப்பில் பெண் எப்படி நேரடியாக சம மதிப்புள் ளவளாக மாற முடியும்? என்றெல்லாம் ஆதி காலம் தொட்டு சில பலர் சொல்லி வந்த விஷயத்தை மிக நுட்பாக அதே சமயம் எளிதில் சகலரும் புரியும்படியான ஒரு பக்கா கமர்ஷியல் சினிமாவாக ‘காற்றின் மொழி’ என்ற தலைப்பில் கொடுத்து அப்ளாஸ் வாங்கியுள்ளார் இயக்குநர் ராதா மோகன். ஆனால் அவருக்கான…
Read More
சர்கார் – திரை விமர்சனம்!

சர்கார் – திரை விமர்சனம்!

சர்கார் படத்தின் டைட்டில் கார்டுகள் போடுமுன் ஒரு ஸ்லைட் போடுகிறார்கள்.. அந்த ஸ்லைடில், “தேர்தலில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான வாக்கை கள்ள ஓட்டாக அடுத்தவன் போடு வது நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் அபாயகரமான குற்றம். ஆனால் இது பொது நிகழ்வாக இன்றும் தொடர்கிறது. இந்த அநீதியை எதிர்த்து, தன் ஓட்டை இழந்த ஒரு ஹீரோ போராடி நீதியை நிலைநாட்டி, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினால் எப்படி இருக்குமென எனக்கு கருவாக ஒரு கற்பனை உதித்தது. பின் மாதக்கணக்கில் விவாதித்து திரைக்கதை எழுதி ‘சர்கார்’ என்ற திரைப்படத்தை இயக்கி எடுத்தேன். இதே கற்பனைக் ‘கரு’ ஒரு உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கும் உதித்தது. எனக்கு முன்பே எங்களது தென்னிந்திய திரைபட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதே கருவை அவரும் சிந்தித்து எனக்கு முன்பே பதிவு செய்திருந்தபடியால் வளர்ந்து வரும் உதவி இயக்குநர் வருண் என்கிற ராஜேந் திரனை…
Read More