26
Oct
இயக்குநர் சுசீந்தரனின் ஜீனியஸ் விமர்சனத்துக்குள் போகும் முன் கொஞ்சம் நிஜமான புள்ளி விபரத்துடன் கூடிய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம். நவீன மயமாகி விட்ட சமூகத்தில் வளரும் நம் குழந்தைகளில் பலருக்கும் மன அழுத்தம் என்னும் எளிதில் கண்டுணர முடியாத, உடனடியாக தீர்க்க முடியாத நோய் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஸ்டெரெஸ் அல்லது டிப்ரெஷன் எனப்படும் மன அழுத்தம் ஏற்பட சில பல சமூகக் காரணங்கள், உளவியல் காரணங்கள், மரபு வழிப் பிரச்சினைகள் என ஏதேதோ காரணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட முதன்மை யானது இங்குள்ள கல்வி சார்ந்த பிரச்சினைகள்தான் .அதாவது நம் குழந்தைகளுக்கான கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும், விளையாட்டுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுகாக பல்வேறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அடுத்தடுத்து ஆட்சி கட்டிலில் அமர்வோரின் அலட்சிய போக்கால கல்வி வணிக மயமாக்கப் பட்டதன் விளைவால் மாணவர்கள் இன்றளவும் மதிப்பெண் எடுக்கும்…
