இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார்

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.
Read More
நடிகர் ஜீவா பிடித்த சிகரெட் !  ஹோட்டலில் தீ அலாரம்!

நடிகர் ஜீவா பிடித்த சிகரெட் ! ஹோட்டலில் தீ அலாரம்!

நடிகர் ஜீவா 83 பட ஷீட்டிங்கில் கலந்து கொண்ட போது, சிகரெட் பிடித்தே மொத்த ஹோட்டலையும் அலாரமடிக்க வைத்து காலி செய்திருக்கிறார். 1983 கிரிக்கெட் உலககோப்பையை வென்ற தருணத்தை மையமாக வைத்து உருவான பாலிவுட் படத்தில் நடிகர் ஜீவா ஶ்ரீகாந்த் பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் அனைத்து மொழிகளிலும் பெரு வெற்றி பெற்றிருக்கிறது இந்தப்படத்தின் ஷூட்டிங்கின் போது லண்டனில் ஒரு ஹோட்டலி படக்குழு தங்கியுள்ளது. அங்கே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை குறித்து நடிகர் ஜீவாவே இரு பேட்டியில் கூறியதாவது… 83 பட ஷீட்டிங்கில் பண்ண கலாட்டா எக்கசக்கமாக இருக்கு. லண்டன் போன மொத நாளே ஹோட்டல் மொத்தத்தையும் காலி பண்ணி பெரிய கலாட்டா நடந்தது. முதல் நாள் ஷீட்டிங் எல்லோரும் ஹோட்டல் வந்தப்புறம், நான் அங்க இருந்த டீமோட சேர்ந்து ரிகர்சல் பண்ணேன். படத்துல ஒரு சீன் வரும் ஶ்ரீகா தொடர்ந்து சிகரெட் பிடிக்கிற மாதிரி, அந்த காட்சிக்காக டீமோட…
Read More
கேரள கோவிலில் ஒலித்த புஷ்பா படத்தின் “ஏ சாமி” பாடல் !

கேரள கோவிலில் ஒலித்த புஷ்பா படத்தின் “ஏ சாமி” பாடல் !

சமீபத்த்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற புஷ்பா படத்தில், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்த ‘ஏ சாமி’ பாடல் கேரள கோவிலில் நாதஸ்வர கலைஞர்களாக வாசிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையே திரும்பி பார்க்கும், பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் 'புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்த புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானது. கொரோனா காலகட்டத்தை கடந்து திரையரங்குகளில் கூட்டத்தை வரவைத்ததோடு தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் இந்தியா முழுதும் மிகப்பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசை மிக முக்கியமாக இருந்தது குறிப்பிடதக்கது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானதுடன் பெரும் பேசுபொருளாகவும் ஆனது குறிப்பிடதக்கது.…
Read More
சுந்தர்.C நடிப்பில் K.திருஞானம் இயக்கும் “ஒன் 2 ஒன்”

சுந்தர்.C நடிப்பில் K.திருஞானம் இயக்கும் “ஒன் 2 ஒன்”

  24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் "ஒன் 2 ஒன்" எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த நடிகர் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் தயாரிப்பு - 24 HRS புரொடக்‌ஷன்ஸ் எழுத்து இயக்கம் - K.திருஞானம் ஒளிப்பதிவு -…
Read More
20 வருடங்களை கடந்த அழகி திரைப்படம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நடிகை நந்திதாஸ் !

20 வருடங்களை கடந்த அழகி திரைப்படம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நடிகை நந்திதாஸ் !

தமிழ் சினிமா வரலாற்றில் பொன் மகுடமாக திகழும் ‘அழகி’ படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையை புரட்டி பார்க்கும் டைரியை போன்று, பள்ளிக்கால காதல், வாழ்வின் மீதேற்படுத்தும் தாக்கத்தை அழகான காவியமாக சொன்ன படம் அழகி. இயக்குநர், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இயக்கத்தில், பார்த்திபன், நந்திதாஸ், தேவயானி நடித்த இப்படம் தமிழகத்தில் வெள்ளி விழா கொண்டாடியது. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, படத்தின் ரசிகர்கள் உட்பட பலரும், படம் குறித்த தங்கள் மலரும் நினைவுகளை இணையமெங்கும் பகிர்ந்து வருகின்றனர். இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்து நம் அனைவர் மனதையும் கவர்ந்த நடிகை நந்திதா தாஸ் இது குறித்து பகிர்ந்து கொண்டதாவது… எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள், அழகி படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்து விட்டது. இதை நம்பவே முடியவில்லை. எனக்கு நரைத்த முடி, கன்ணாடியெல்லாம் வந்து விட்டது. ஆனாலும் 20 வருடங்கள் கடந்ததை நம்பமுடியவில்லை. படத்தின்…
Read More
காவல்துறை வீரர்களின் நினைவேந்தல் நாளையொட்டி, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட பாடல்

காவல்துறை வீரர்களின் நினைவேந்தல் நாளையொட்டி, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட பாடல்

காக்கும் காக்கிக்கு வீரவணக்கம், காக்கிற காக்கிக்கு வீர்வணக்கம் ! ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை விரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா மறறும் வெஸ்லி எழுத்தில், சசிகலாவும், பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் இன்று 21.102021 வெளியாகியுள்ளது. இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது… “வீரவணக்கம்” பாடல் உருவானதே ஒரு இனிமையான அனுபவம். கொரோனோ தொற்று காலத்திற்கு பிறகு, முன்கள பணியாளர்களாக பணியாற்றிய, காவல்துறை நண்பர்களை வாழ்த்தும் வகையில், கமிஷ்னருடன்…
Read More
டைப் 2 நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களைத் தீர்க்க வந்துவிட்டது ட்வின் தொழில் நுட்பம்..!

டைப் 2 நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களைத் தீர்க்க வந்துவிட்டது ட்வின் தொழில் நுட்பம்..!

இன்றைக்கு உலக மக்களின் தலையாய பிரச்சினை நீரிழிவு நோய்தான். அதிலும் டைப் 2 நீரிழிவு இன்று சாதாரணமாகி விட்டது. இந்தியாவில் அதிகமாக பாதிக்கும் இந்த குறைபாடு உள்பட பல்வேறு வகையாக நாள்பட்ட நோய்களைத் தீர்க்க வந்திருக்கிறது Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்). Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்) ™ என்பது ஒவ்வொரு தனி நபரின் மெட்டபாலிசத்துக்கான (metabolism) டிஜிட்டல் திட்டம். இது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அறிவியலுடன் கட்டமைக்கப் பட்டுள்ளது, இது டைப் 2 நீரிழிவு (Type 2 Diabetes) உட்பட நாள்பட்ட பிற நோய்களைத் (Chronic Metabolic Diseases) தடுக்க (prevent) மற்றும் சரி (reversal) செய்வதில் உதவி புரிகிறது. மருத்துவ பரிசோதனைகளில், 90% க்கும் மேற்பட்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு சரி (reversal) செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 92% பேர் ட்வின் சிகிச்சைக்குப் பிறகு நீரழிவு நோய்க்கான மருந்துகள் எடுத்துக் கொள்வதை…
Read More
error: Content is protected !!