முந்தைய மூன்று ஹைப்பர்லோகல் ஆட்டோ இன்சூரன்ஸ் விளம்பர படங்களின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, டெக்-முதல் காப்பீட்டு நிறுவனமான ACKO, பார்வையாளர்களுக்கு, உள்ளூர் ரசனையைக் கொண்டு வருவதற்காகச் சென்னையில் ‘ACKO போல வருமா’ என்ற தனது சமீபத்திய விளம்பர பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. டிடிபி முத்ரா சவுத் மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட இந்த விளம்பரத் திரைப்படங்களைப் பிரபல தமிழ் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மேலும் பிரபல தமிழ் நடிகரான யோகி பாபு மற்றும் இன்ஃப்ளூயன்ஸர் பால் டப்பா ஆகியோர் அப்பா-மகன் ஜோடியாக நடித்துள்ளனர்.
சென்னை முழுவதும் 500,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன், ACKO சந்தையில் ஒரு பாராட்டத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது மற்றும் புதிய தலைமுறை காப்பீட்டுத் தீர்வுகள் வழங்குவதில் முன்னணியில் உள்ளது. காப்பீட்டாளரிடமிருந்து நேரடியாக மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் நன்மைகளை முன்னிலைப்படுத்துவதே, இந்த விளம்பர பிரச்சாரத்தின் நோக்கமாகும். நகைச்சுவை கலந்து, நம் வாழ்வியல் அம்சங்களை மையப்படுத்தி, நம் நண்பர்களைக் கலந்தாலோசித்து, முடிவெடுக்கும் முறையை இந்த விளம்பரம் அருமையாக விளக்குகிறது. “நாலு பேர் கிட்டே கேட்டுப் பண்ணனும்” (“நாலு பேரைக் கலந்தாலோசிக்க வேண்டும்”) என்ற தமிழ் சொற்றொடரைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியுள்ள, ACKO விளம்பரத் திரைப்படங்கள் பார்வையாளர்கள் தங்கள் இன்சூரன்ஸை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுத்து, தொந்தரவில்லாத இன்சூரன்ஸ் திட்டத்தை அனுபவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. மூன்று விளம்பரப் படங்களில் ஒவ்வொன்றும் ACKO வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பலன்களைப் பற்றி விவரிக்கிறது – மலிவு விலை, தொந்தரவு இல்லாத கோரிக்கை செயல்முறை, சாலையோர உதவி மற்றும் எளிதான புதுப்பித்தல் – என இன்சூரன்ஸ் குறித்த விவரங்கள் அனைத்தும், தந்தை மகன் உரையாடல்களாக விரிகிறது.
ACKO இன் தலைமை மார்கெட்டிங்க் அதிகாரி ஆஷிஷ் மிஸ்ரா, விளம்பரப் பிரச்சாரம் குறித்து கூறியதாவது.., “சென்னை ஒரு முக்கியமான மற்றும் ACKO நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகும். எங்களின் காப்பீட்டுத் தயாரிப்பு மற்றும் எளிதான க்ளெய்ம் செயல்முறைக்காகச் சென்னை மக்களிடம் இருந்து நிறைய அன்பையும் நேர்மறையான கருத்துக்களையும் பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு மைச்சாங் சூறாவளியின் போது வாடிக்கையாளர்கள் எங்களின் விரைவான பதிலளிப்பு மற்றும் விரைவான நடவடிக்கைகளைக் குறிப்பாகப் பாராட்டினர், மேலும் இது சென்னை மக்கள் மீதான எங்களின் அர்ப்பணிப்புக்கான உண்மையான சான்றாகும். இந்த புதிய விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம் மகிழ்ச்சியான தகவல்களுடன், எங்கள் நிறுவனம் பற்றிய செய்தி அதிக பார்வையாளர்களைச் சென்றடையும் என்று நான் நம்புகிறேன், மேலும் ACKO மற்றும் அதன் சேவைகள் பற்றிய செய்திகள் சென்னை முழுவதும் விரைவில் பரவுமென எதிர்பார்க்கிறேன்.”
டிடிபி முத்ரா குழும கிரியேட்டிவ் இயக்குநர் சூரஜ் பிள்ளை கூறியதாவது..,, “மோட்டார் இன்சூரன்ஸ் பிரிவில் மிகப்பெரும் சக்தியாக இருக்கும் ACKO க்கு புதுமையான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய பிரச்சாரம் தேவைப்பட்டது. யோகி பாபுவுக்கும் பால் டப்பாவுக்கும் இருக்கும் எளிய மனிதர்கள் எனும் ஆளுமை மூலம் விளம்பர கருத்துக்களைப் பார்வையாளர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். கௌதம் மேனன் போன்ற திறமையான இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது உண்மையான பாக்கியம், கேமராவின் பின்னால் ஒரு மேஜிக்கைக் கொண்டுவருகிறார். நான் ரசித்தது போலவே, பார்வையாளர்களும் இந்த விளம்பரங்களை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
பல ஆண்டுகளாக, ACKO, சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதன் மூலமும், சிறந்த விலைகளை வழங்குவதன் மூலமும் மோட்டார் இன்சூரன்ஸ் பிரிவில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. நீண்ட காலமாக இடைத்தரகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் சந்தையில், ACKO ஆனது, ஆப்ஸ்-மூலம் இன்சூரன்ஸ் பெறுவது மற்றும் சிறந்த விலைகள், வாங்கும் செயலை எளிதாக்குவது என, வாடிக்கையாளர்களுக்கு புதிய வகையில், எளிமையான வழியில் இன்சூரன்ஸை பெறுவதை உறுதி செய்துள்ளது. மோட்டார் காப்பீட்டில் இடைத்தரகர்களின் பங்கை நீக்குவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்குப் பணப் பலன்களைக் கூடுதலாக்குவதில் ACKO வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. sதிரைப்படங்கள் மட்டுமின்றி, சென்னை முழுவதும் பல சேனல்கள் மூலம் இந்த விளம்பரங்கள் பிரச்சாரம் செய்யப்படுகிறது, இதில் நகரின் அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் வீட்டிற்கு வெளியே ரெண்டிஷன்கள் மற்றும் நுகர்வோரை சென்றடைவதற்கான ரேடியோ செயல்பாடுகள் ஆகியவையும் அடங்கும்.