23
Mar
பின்னணி: லைகா யார், என்ன? லைகா புரொடக்ஷன்ஸ் - தமிழ் சினிமாவுல பெரிய பெயர். இலங்கையைச் சேர்ந்த தமிழர் சுபாஸ்கரன் அல்லிராஜாவோட தலைமையில இந்த நிறுவனம் தமிழ் சினிமாவுல பெரிய பட்ஜெட் படங்களை தயாரிச்சு, பல ஹிட்ஸையும், சில ஃப்ளாப்ஸையும் கொடுத்திருக்கு. பொன்னியின் செல்வன், 2.0, இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சினு பெரிய ஸ்டார்களோட படங்களை எடுத்து, தமிழ் சினிமாவுல ஒரு முக்கிய பிளேயரா இருந்து வந்துச்சு. ஆனா, இப்போ "லைக்கா சினி துறைய விட்டு விலகுது"னு ஒரு பரபரப்பு சேதி சுத்துது. இதுக்கு பின்னால என்ன இருக்கு? கொஞ்சம் ஆழமா பார்ப்போம். சேதியோட ஆரம்பம் இந்த பேச்சு சமீப காலமா சமூக வலைதளங்கள்லயும், சினிமா வட்டாரங்கள்லயும் பரவ ஆரம்பிச்சது. குறிப்பா, விடாமுயற்சி (அஜித் நடிச்ச படம்), வேட்டையன் (ரஜினி படம்), இந்தியன் 2 (கமல் படம்)னு அடுத்தடுத்து லைக்காவோட படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால, நிறுவனம் நிதி நெருக்கடியில…