எனது அண்ணன் அருண் மகள் அப்ரினா -வை காணலை!- லலிதா குமாரி அப்செட்!

எனது அண்ணன் அருண் மகள் அப்ரினா -வை காணலை!- லலிதா குமாரி அப்செட்!

கோலிவுட்டில் சீனியர் மோஸ்ட் (எக்ஸ்)( நடிகர்களில் ஒருவரான ஆனந்தன் பேத்தியும், பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையுமான லலிதாகுமாரியும், நடிகர் பிரகாஷ்ராஜும் கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகன் பிறந்து விபத்தில் காலமாகிவிட்டார். கடந்த 2009-ம் ஆண்டு லலிதாகுமாரியும் பிரகாஷ்ராஜும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில், விவாகரத்து வழங்கப்பட்டது. விவாகரத்து பெற்றாலும் பிரகாஷ்ராஜும் லலிதாகுமாரியும் சுமுகமாகவே இருந்தனர். அத்துடன் பிரகாஷ்ராஜும் தன் மகள்களை அடிக்கடி சந்தித்துவந்தார். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியான 'பயணம்' படத்தை வெளியிடுவதற்கு சில ஃபைனாசியர்களால் சிக்கல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்கூட லலிதாகுமாரி தன் சொத்தை உத்தரவாதமாக அளித்து அந்தப் படம் வெளியாக உதவினார். பின்னர், பிரகாஷ்ராஜ் வேறொரு பெண்ணை மணம் முடித்து விட்டார். அதே சமயம் இவர்களுக்குள்ளான உறவில் சிக்கல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில்தான் பிரகாஷ்ராஜின் இரண்டாவது மகள் அபிர்னா, இன்று காலை…
Read More
‘நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன்.?’ – ராகவா லாரன்ஸ் டென்ஷன்!

‘நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன்.?’ – ராகவா லாரன்ஸ் டென்ஷன்!

நடிகர் ராகவா லாரன்ஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது தாயுடன் நேற்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் கோவில் வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வின் கொடுமையால் மருத்துவ இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாதது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ கூடாது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை பாஜக விமர்சித்து வருகிறது. பாஜகவுக்கு காலம் பதில் சொல்லும். இவ்வாறு அவர் பேசினார் என்று தகவல் வெளியானது. இதையடுத்து ராகவா லாரன்ஸ் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், .” நேற்று எனது முனி 4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன்..தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள்  சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள்.. கோயில்…
Read More
கவுதம் மேனன் தயாரிப்பில் ‘வீக் எண்ட் மச்சான்’ -என்னும் புதிய இணையத் தொடர்!

கவுதம் மேனன் தயாரிப்பில் ‘வீக் எண்ட் மச்சான்’ -என்னும் புதிய இணையத் தொடர்!

'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் கவுதம் மேனன். 'அச்சம் என்பது மடமையடா'','நெஞ்சம் மறப்பதில்லை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்களை இந்நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். தள்ளிபோகாதே' பாடலில் ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் 150 மில்லியன்களுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்று, இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற்றுள்ளது 'ஒன்றாக என்டர்டைன்மெண்ட்' யு டியூப் சேனல். அந்நிறுவனத்தின் யூ-டியூப் சேனலில் ’உரையாடல் அண்ட் ஸ்டஃப்' என்ற பெயரில் பிரபலங்களை கவுதம் மேனன் எடுத்த வீடியோ பேட்டிகள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதுள்ள கால மாற்றத்துக்கு ஏற்றவாறு, புதிதாக இணையத் தொடர் ஒன்றை தயாரித்துள்ளார் கவுதம் மேனன். 'வீக் எண்ட் மச்சான்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் முழுக்க இளைஞர்களை மையம் கொண்டே உருவாக்கியுள்ளனர். வார கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு ஒன்றாக…
Read More
‘களத்தூர் கிராமம்’ படத்தின் கதை என்ன?- இயக்குநர் பேட்டி!

‘களத்தூர் கிராமம்’ படத்தின் கதை என்ன?- இயக்குநர் பேட்டி!

‘களத்தூர் கிராமம்’. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார். டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் வெளியிடுகிறார். கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி . இவர் ஏற்கனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர ‘தகராறு’  சுலீல் குமார், அஜய் ரத்னம், தீரஜ் ரத்னம், ரஜினி மகா தேவய்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை என்ன இயக்குனரிடம் கேட்டபோது. இது ஒரு புறக்க ணிக்கப்பட்ட கிராமத்தின் கதைஎன்று கூறலாம். அந்தக் கிராமத்தைப் போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பும் ஏமாற்றமும் புறக்கணிப்பும் அனுபவிக்கிற மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள். அவர்களா? போலீஸா? யார் வெல்கிறார்கள் என்பதே கதை. இது ஒரு ஆக்ஷன் படம் என்றாலும் குடும்பத்தில் நிகழும் மனம் நெகிழ வைக்கும் பாசப் பகுதிகளும் உண்டு.இந்தக் கதையைக் கேட்ட நடிகர் கிஷோர் தனது வேறு படத்தின் தேதிகளை மாற்றி இப்படத்தில்…
Read More
நீட் ‘அனிதா’ வீட்டுக்கு போய்  ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

நீட் ‘அனிதா’ வீட்டுக்கு போய் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் டாக்டருக்கு படிக்க முடியாததால் கடந்த 1-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்குப்பின் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பள்ளி-கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டக்களத்தில் குதித்து உள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று காலை அரியலூர் குழுமூரில் உள்ள மாணவி அனிதா வீட்டிற்கு சென்றார். அங்கு அனிதாவின் தந்தை  சண்முகம் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வீட்டில் தரையில் அமர்ந்தபடி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எந்த உதவிகள் வேண்டுமானாலும் செய்து தருவதாக அனிதாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பின்னர்…
Read More
தமிழ் சினிமாவுக்கு புதுமையான படம் – ஹர ஹர மஹாதேவகி

தமிழ் சினிமாவுக்கு புதுமையான படம் – ஹர ஹர மஹாதேவகி

கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ ஹர ஹர மகாதேவகி “ Blue Ghost Productions , தங்கம் சினிமாஸ் தங்க ராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ் P ஜெயகுமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்துக்கு இசை பாலமுரளி பாலு , ஒளிப்பதிவு செல்வ குமார். இதன் இசை வெளொயீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் கௌதம் கார்த்திக் பேசியது :- எல்லோரும் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்து ரசித்திருப்பீர்கள். இந்த கதை பலருக்கு சென்று மீண்டும் என்னை தேடி வந்துள்ளது. இயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களை தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் நான் மிகவும் ரசித்து , சிரித்து கேட்டேன். பாடல்களை கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு இயக்குநர் என்னிடம்…
Read More
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்பைடர்’ ஆடியோ ரிலீஸ் விழா!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்பைடர்’ ஆடியோ ரிலீஸ் விழா!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'ஸ்பைடர்'. என்விஆர் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ் உரிமையை லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா அரங்கம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள் மகேஷ்பாபுவின் ரசிகர்கள். விழாவில் பேசிய நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “நான் ரஜினி, அஜித், விஜய் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு மாஸ் சூப்பர் ஸ்டாருடன் நடித்திருக்கிறேன். முதல் நாள் தான் ஒரு ஹாலிவுட் நடிகரை பார்த்த மாதிரி இருந்தது. இரண்டாவது நாளில் இருந்தே சகஜமாக தமிழில் என்னுடன் பேச தொடங்கி விட்டார். சமூக அக்கறை உடைய படங்களை எப்போதும் கொடுத்து வரும் முருகதாஸ் சார் நீங்கள்…
Read More
நான் சினிமா பார்ப்பது இல்லை! புதுச்சேரி முதல்வர் பேச்சு!

நான் சினிமா பார்ப்பது இல்லை! புதுச்சேரி முதல்வர் பேச்சு!

புதுவையில் இந்திய திரைப்படவிழா வரும் இன்று தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது. சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வாகியுள்ள 'இறுதிச் சுற்று' திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதுடன் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையை இயக்குநர் சுதா கொங்கராவிடம் முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.. புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, மத்திய அரசு திரைப்பட விழா இயக்குநரகம், நவதர்சன் திரைப்படக் கழகம் சார்பில் இந்திய திரைப்பட விழா-2017 ஐந்து நாட்களுக்கு புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "நல்ல திரைப்படங்களை ரசியுங்கள். ஆனால் சினிமா மோகம் இங்குள்ளது. 'விவேகம்' திரைப்படம் வெளியானபோது எனக்கு ஒருவர் போன் செய்தார். விவேகம் படத்துக்கு உங்களுக்கு 500 டிக்கெட் வந்துள்ளதாமே எனக்கு இரண்டு டிக்கெட் தாருங்கள் என்றார். நான் அவரிடம் நான் சினிமா பார்ப்பது இல்லை. தவறான தகவல் என்றேன். அத்துடன் திரைப்பட நடிகர்களின் படங்களுக்கு பால் அபிஷேகம் செய்யும் பழக்கமும் இங்குதான்…
Read More
நான் இப்போ ரெகுலரா ஜிம்முக்கு போறேன்! – ஜோதிகா

நான் இப்போ ரெகுலரா ஜிம்முக்கு போறேன்! – ஜோதிகா

36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகளிர் மட்டும்’.. இந்தப்படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என மூன்றும் இன்னும் மூன்று கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ளார்.. வரும் செப்-15ல் இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்த மகளிர் மட்டும் நாயகி ஜோதிகாவிடம் படம் குறித்து கேட்ட போது, “மகளிர் மட்டும் ரோட்- ட்ரிப்பில் ஒன்றில் மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பது தான் கதை… இந்த கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஊர்வசி , சரண்யா பொன்வண்ணன் , பானுப்ரியா ஆகியோரோடு இனைந்து நடிக்கும் போது சிறிது பயமாக இருந்தது. எங்கள் முதல் நாள் படப் பிடிப்பு ஒரு படகில் வைத்து நடைபெற்றது. அப்போது என்னால் சரியாக வசனத்தை கூறி நடிக்க முடிய…
Read More
சிம்பு மியூசிக்கில் உருவான  சக்க போடு போடு ராஜா’ பட பாடல் க்ளிம்ப்ஸ்

சிம்பு மியூசிக்கில் உருவான சக்க போடு போடு ராஜா’ பட பாடல் க்ளிம்ப்ஸ்

சந்தானம் நடிப்பில் சிம்பு இசையமைக்கும் படம் 'சக்க போடு போடு ராஜா'. இந்தப் படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான வி.டி.வி.கணேஷ் தயாரித்துள்ளார்.  சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா டூயட் பாடி ஆடி வருகிறார்.மேலும், முக்கிய வேடங்களில் விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத், சஞ்சனா சிங் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘விடிவி புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார். தற்போது இப்படத்தின் `கலக்கு மச்சா தௌலாத்துல' பாடல் யூடியூபில் நேற்று(செப்டம்பர் 8) வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.`பீப்' பாடல் பாடி பெரும் சர்ச்சைக்கு உள்ளானன, அனிருத்-சிம்பு கூட்டணி 'சக்க போடு போடு ராஜா' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் அறிமுக பாடலாக வரவிருக்கும் `கலக்கு மச்சா தௌலாத்துல' பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடலின்…
Read More