இதெல்லாம் படம் இல்ல பாஸ் பா…ட…ம்!

இதெல்லாம் படம் இல்ல பாஸ் பா…ட…ம்!

வெற்றியடைந்த படங்களை விட மிக மோசமாக தோல்வியடைந்த படங்கள் தான் நமக்கு பெரிய படிப்பினைகளை தரும் என்பார்கள் சினிமா ஜீனியஸ்கள். அப்படி நமக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நிறைய படிப்பினைகளை இந்த ஆண்டு வாரி வழங்கிய படங்கள் இவை.. சாகசம் பிரஷாந்தையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு நினைவுக்கே வருவதில்லை. ஆனாலும் அவர் நடித்த ஒரு படம் ஏகப்பட்ட பில்டப்களுடன் இந்த ஆண்டு வெளியானது. வெளியான பின்னர் தான் அது ஒரு ஹிட் அடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் என தெரிய வந்தது. அம்புட்டு ரகசியமா வெச்சிருந்தாங்களாம்… அந்த ஹிட் படம் எடுத்த டைரக்டர் மட்டும் இந்த ரீமேக்கை பார்த்திருந்தால் கண்ணீர் விட்டு அழுதிருப்பார். அந்த அளவுக்கு படத்தை நாசமாக்கி இருந்தார்கள். வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரிஜினல் படத்திலிருந்த சில காட்சிகளை அப்படியே வெட்டி இதில் சேர்த்தும் இருந்தார்கள். வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து காண்டாமிருகம் என்று பேர் வைத்த கதையை தன் மகனுக்கே செய்து அழகு பார்த்திருந்தார்…
Read More
வரிவிலக்குக்கு ஒரு கோடி கட்டிங்? அலறும் தயாரிப்பாளர்கள்!

வரிவிலக்குக்கு ஒரு கோடி கட்டிங்? அலறும் தயாரிப்பாளர்கள்!

ஆட்சியாளர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதில் கண்டிப்பாக சுயலாபம் இருக்கும். தமிழ் கலாசாரத்தை வலியுறுத்தும், தமிழில் டைட்டில் வைக்கப்படும், சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெறும் படங்களுக்கு வரிவிலக்கு என்று அரசு அறிவித்திருக்கிறது. இது திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகும் தொடர்கிறது. ஆனால் சமீபகாலமாக இந்த எந்த கண்டிஷனிலும் வராத படங்களெல்லாம் வரிவிலக்கு பெற்று விடுகின்றன. எப்படி என்று விசாரித்தால் பகீர் உண்மைகள் வெளிவருகின்றன. முதல் கண்டிஷன் தமிழில் பெயர் வைப்பது… இது நடைமுறையிலேயே இல்லை. தமிழில் பெயர் வைக்கப்பட்ட உதயநிதியின் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டதை நாம் அறிவோம். ரெமோ போன்ற ஆங்கில டைட்டில் படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கிறது. அடுத்து யு சர்டிஃபிகேட்… இங்கே யு சர்டிஃபிகேட் வாங்கி வரிவிலக்கு பெற்ற படங்கள் வெளிநாடுகளில் யு/ஏ சர்டிஃபிகேட் பெறுகிறது. தமிழ் சென்சாரின் லட்சணத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். நாம் விசாரித்த வரை முழுக்க முழுக்க கட்டிங்கே வரிவிலக்கை…
Read More
அரசியலுக்கு குட்பை… குழப்பத்தில் குஷ்பு?

அரசியலுக்கு குட்பை… குழப்பத்தில் குஷ்பு?

குழப்பங்கள் குஷ்புவுக்கு புதிதல்ல. குழப்பி விட்டு அதில் இருந்து மீனைப் பிடிக்கும் அரசியலிலும் குஷ்பு கில்லாடி தான். ஆனால் இப்போது குஷ்புவுக்கு ஏற்பட்டிருப்பது குழப்பத்தை தாண்டிய தயக்கம். காங்கிரஸின் திடீர் அதிமுக பாசம் கலைஞர் குடும்பமும், ஸ்டாலினும் என்ன நினைத்தாலும் சரி… குஷ்பு இன்னமும் கலைஞர் அபிமானியாகத் தான் இருக்கிறார். திமுக கைவிட்ட பின்பு கூட காங்கிரஸில் இணைந்தது திமுகவையோ கலைஞரையோ விமர்சிக்க கூடாது என்பதற்கு தான். இப்போது கூட கலைஞருக்கு உடல் நலம் இல்லை என்றதும் சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. நோய்த்தொற்று காரணமாக யாரையுமே அனுமதிக்கவில்லை என்று காரணம் சொல்லிவிட்டார்கள். காங்கிரஸில் சமீபகாலமாக அதிமுகவுடன் நெருங்கலாம் என்ற போக்கு காணப்படுகிறது. காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் திருநாவுக்கரசர் அதிமுக மீது பாசம் கொண்டவர். ஜெயல்லிதாவை நெருங்கும் பொருட்டே அவர் நியமிக்கப்பட்டார் என்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் தலைவரான பின்னர் திமுகவை விமர்சித்தார். அதிமுக அரசுக்கு ஆதரவாக பேசினார். நக்மா…
Read More
விஜய் ஊமை குசும்புக்காரர்..!

விஜய் ஊமை குசும்புக்காரர்..!

விஜய் ஒரு மூடி டைப், அவர் ஸ்பாட்ல யார்கிட்டயுமே பேசமாட்டார் என்பது போல தான் செய்திகள் வரும். ஆனால் விஜய் அதற்கு நேர் எதிர் கேரக்டர். ஆமாம் விஜய் போல கலாய்க்க யாராலும் முடியாது. ஒரு நக்கல் கமெண்டை நச்சென்று அடித்துவிட்டு நைஸாக நகர்ந்துவிடுவார்... அந்த அளவுக்கு ஊமை குசும்புக்காரர். அந்த அனுபவங்களில் சில... சத்யன் நண்பன் பட ஷூட்டிங்ணா...விஜய் சார், ஜீவா சார், ஸ்ரீகாந்த் சார்னு எங்க எல்லாரையும் ஜட்டியோட ஷேம், ஷேமா நிக்க வெச்சு ரேக்கிங் பண்ணுவாங்கள்ல அந்த ஸீனோட ஷாட்டுங்ணா... ஷாட் எடுத்தது மிட்நைட்ல. அது ஒரு குளிர் சீஸன். உடம்புல ஒட்டு துணி கூட இல்லாம ஜட்டியோட நிக்கணும். எப்படி இருக்கும் நினைச்சு பாருங்க. ஷாட் எடுக்கும்போது விஜய் சார், ஜீவா சார், ஸ்ரீகாந்த் சார்லாம் ஜட்டியோட நிப்பாங்க. ஷாட் முடிஞ்சதும் துண்டு எடுத்து போத்திக்குவாங்க. ஏன்னா ஆம்பளை, பொம்பளைகனு சுமாரா 200 பேர் ஸ்பாட்ல…
Read More
ரஜினியின் பஞ்ச்..!

ரஜினியின் பஞ்ச்..!

ரஜினி படத்தில் பன்ச் பேசுவார் தெரியும். நிஜத்திலும் பன்ச் பேசியிருக்கிறார். அவர் பேசிய சில‌ பன்ச்களை பார்ப்போம். ''சினிமா நிகழ்ச்சிக்காக ஒருமுறை மதுரைபோயிருந்தப்ப, மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே எல்லாரும் பேர், பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செஞ்சாங்க. கோயில் குருக்கள்என்கிட்ட, 'உங்க நட்சத்திரம் என்ன?’னு கேட்டப்ப, 'தெரியாது சாமி’னு சொன்னேன். பின்பு, ரசிகர்கள் எனக்கு 'சூப்பர் ஸ்டார்’னு ஒரு நட்சத்திரத்தைக்கொடுத்தாங்க. அந்த நட்சத்திர ராசியை கடைசி வரை காப்பாத்தணும்னு முடிவெடுத்தேன்! ''நான் கஷ்டப்பட்டபோதும், வசதியா இருக்கும்போதும் என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர், ஆச்சர்யமான நண்பன். ஆஞ்சநேயர் பக்கத்துல இருந்தா ராமனுக்கு அசுர பலம் சேரும். அதுபோலஎனக்கு ஆஞ்சநேயரா இருந்த நண்பன் காந்தி. அவன் இறந்தது பெரிய இழப்பு!'' ''சம்மர் வந்துட்டா, 'போன வருஷத்தோட இந்தவருஷம் வெயில் ஜாஸ்தி’னு எல்லாரும் புலம்புறாங்க. ஆனா, அவங்களுக்குஒரு வயசு ஜாஸ்தி ஆகிருச்சு. அதனால உடம்பு அந்த அனலைத் தாங்கமுடியலைங்கிறதை மறந்துடு…
Read More
அப்பாஸ் கலைவிழா 2017 – வெள்ளி விழா கொண்டாட்டம்.

அப்பாஸ் கலைவிழா 2017 – வெள்ளி விழா கொண்டாட்டம்.

அப்பாஸ் கல்சுரல் அகாடமி சென்னை மாநகரின் பொழுது போக்கு கலையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்ட நிறுவனம். என்றும் நினைவில் வாழும் அப்பாஸ் ஜெயராமன் அவர்களின் சீரிய உழைப்பு இன்று இந்த நிறுவனத்தை சிகரம் தொட வைத்திருக்கிறது. மெல்லிசை நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் தனக்கே உரிய சீரிய முறையில் நடத்தி வந்த அப்பாஸ் நிறுவனர் திரு ஜெயராமன் ஒரு ஒருங்கிணைந்த கலைவிழாவினை ஆண்டு தோறும் நடத்த ஆசைப்பட்டார். அவருடைய இந்த கனவை பத்ம பூஷண் திரு K.J.ஜேசுதாஸ் அவர்களிடம் தெரிவிக்க அவர் திரு ஜெயராமனை உற்சாகப் படுத்தி உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி தன் பரிபூரண ஆசியும் முழு ஒத்துழைப்பையும் தருவதாக உறுதி அளித்தார். திரு ஜேசுதாஸ் அவர்களின் நல்ல உள்ளம் தந்த ஒத்துழைப்பு இன்று அப்பாஸ் கல்சுரல் அகடமியை வெள்ளி விழா காணச் செய்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பு அன்று தொடங்கி இந்த ஆண்டு வரை…
Read More
வைகை எக்ஸ்பிரஸ் : அடுத்த மாத வெளியீடு

வைகை எக்ஸ்பிரஸ் : அடுத்த மாத வெளியீடு

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ். அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்குகிறார் ஆர்கே. மக்கள் பாசறை வழங்கும் அடுத்த படத்தை ஆர் கே நடிக்க 'தண்ணில கண்டம்' படத்தின் இயக்குனர் எஸ் என் சக்திவேல் இயக்குகிறார். எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில் ஆர் கே -வடிவேலு காம்பினேஷன் கலக்கியெடுத்தது. இன்று வரை தொலைக்காட்சிகளில் ஆர் கே வடிவேலு நடித்த எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களில் இருந்து அதிகம் பார்த்து ரசிக்கும் காமெடியாக உள்ளது. இக்கூட்டணி வெற்றி பெற்ற கூட்டணியாக வலம் வந்தது.…
Read More
நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்

நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்

தன்னுடைய மனதை மயக்கும் இசையால், தமிழ் திரையுலகிலும், இசை பிரியர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்று வருபவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். தரமான கதைக்களங்களை தேர்வு செய்து, அந்த கதைக்களத்திற்கு தன்னுடைய இசையால் உயிர் கொடுக்கும் ஜிப்ரான், தற்போது நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கும் 'அறம்' திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி, 'கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே ராஜேஷ் தயாரித்து வரும் 'அறம்' திரைப்படம், வர்த்தக உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக விளங்கி கொண்டிருப்பது, தண்ணீர் பஞ்சம் தான். அத்தகைய வலுவான கதையம்சத்தை கையாளும் போது, நிச்சயமாக பாடல்களும், பின்னணி இசையின் பங்கும் பெரியளவில் இருக்கும். எங்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்ய கூடிய அந்த இசையமைப்பாளர் யார் என்பதை நாங்கள் யோசிக்கும் பொழுது, எங்கள் அனைவரின்…
Read More