தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இதில் என். விஜயமுரளி தலைவராகவும், ஆ.. ஜான் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
பொருளாளராக பி.யுவராஜ் துணைத்தலைவர்களாக கோவிந்தராஜ், வி.கே.சுந்தரும் இணைச்செயலாளர்களாக கே.செல்வகுமார், வெங்கட் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களாக ஆறுமுகம், பாலன், கிளாமர் சத்யா, வி. பி. மணி, மதுரை ஆர். செல்வம், முத்துராமலிங்கம், சரவணன், செல்வரகு, சுரேஷ்குமார் ஆகிய ஒன்பது பேர் தேர்வாகி உள்ளனர்.
தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சங்கர் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தார்.
Related posts:
விஜய்சேதுபதி வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?January 23, 2018
பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்January 23, 2023
சூரரைப் போற்று படப் பாடல் - நடு வானில் ரிலீஸ்!February 13, 2020
அருண் விஜயின் சினம் பட டிரைலர் வெளியீட்டு விழா!September 5, 2022
நம் சென்னையில் இருந்த இந்தியாவின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டர் தற்போது அது மூடப்படவுள்ளது!June 12, 2023