தீபாவளிக்கு பிரின்ஸ் தான் – சிவகார்த்திகேயன்

0
154

தீபாவளிக்கு பிரின்ஸ் தான் – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், அனுதீப் KV, SVCLLP, Suresh Productions, Shanthi Talkies இணையும் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது.

இப்படத்தில் உக்ரேய்ன் நடிகை மரியா ரியாபோஷப்காவின் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் இளம் இயக்குனர் அனுதீப் KV இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இருமொழித் திரைப்படமாக உருவாகும் பிரின்ஸ் படம் மூலம் பன்முக திறமையாளரான நடிகர் சிவகார்த்திகேயன் டோலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் அனுதீப் நான் பாலசந்தர் ரசிகன் இந்தப்படம் அவரது டிராமா திரைப்படங்கள் போல் இருக்கும் என்றார்.

மேலும் சிவகார்த்திகேயன் பேசும்போது தெலுங்கு திரையுலகிற்கும் தமிழ் திரையுலகிற்கும் பாலமாக இருக்கும். இந்த வருடம் தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் வருகிறது அவருக்கு வாழ்த்துக்கள். இந்த தீபாவளி பிரின்ஸ் தீபாவளியாக இருக்கும் என்றார்.

சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் தவிர இன்னும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அனுதீப் KV எழுதி இயக்கும் பிரின்ஸ் படத்தை Sree Venkateswara Cinemas LLP, Suresh Productions and Shanthi Talkies. ஆகிய நிறுவனங்களின் சார்பில் நாராயணதாஸ் நரங், D.சுரேஷ் பாபு மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தை சோனாலி நரங் வழங்குகிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். தொழில்நுட்ப வல்லுநர்களில் பிரவீன் KL (எடிட்டர்), நாராயண ரெட்டி (கலை), அருண் விஷ்வா (இணைத் தயாரிப்பாளர்) மற்றும் மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா-ரேகா D’one ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.