மாடல் அழகி வைபவி உபாத்யாயா கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்,

பிரபல மாடல் அழகியான வைபவி உபாத்யாயா சீரியல், திரைப்படங்கள், வெப்தொடர்கள் மற்றும் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சாஹில் சாராபாய் மீது ஈர்ப்பு கொண்ட குஜராத்திப் பெண்ணான சாராபாய் vs சாராபாய் படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக 2017 இல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான சாராபாய் vs சாராபாய் இரண்டு சீசன்களும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதை அடுத்து, சமூக வலைதளங்கலில் பிரபலமானார்,

சாராபாய் vs சாராபாய் படத்தின் வெற்றியால் வைபவி உபாத்யாயாக்கு ”க்யா கசூர் ஹை ஆம்லா கா” அனுபமா போன்ற  டிவி நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .மேலும், தீபிகா படுகோனே நடித்த சபாக் படத்திலும், திமிர்  படத்திலும், ப்ளீஸ் ஃபைண்ட் அட்டாச்டு என்ற வலைத் தொடரிலும், அகூபர், பா ரிடயர் தாய் சே, மற்றும் கோட் போன்ற பல  சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ,நடிகை வைபவி உபாத்யா தனது வருங்கால கணவருடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவரின் கார் ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நடிகை வைபவி உபாத்யா உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது உடல் சண்டிகருக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வைபவிக்கு அவரது உறவினர்கள் நண்பர்கள் திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இறுதி சடங்கு இன்று (24/05/23) பிற்பகலில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.