​​’கனா காணும் காலங்கள்’ சீரிஸின், அடுத்த சீசன் ஆரம்பமானது !!

​​’கனா காணும் காலங்கள்’ சீரிஸின், அடுத்த சீசன் ஆரம்பமானது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் பிரபலமான வெப் சீரிஸான ​​'கனா காணும் காலங்கள்' சீரிஸின், அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது !! இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான "கனா காணும் காலங்கள்" சீரிஸின், முதல் இரண்டு சீசன்களின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது ​​'கனா காணும் காலங்கள்' சீரிஸின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'கனா காணும் காலங்கள்' முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியதால், மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையிலும், அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ரசிகர்களிடமிருந்து…
Read More
பாரதிராஜா &  ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘கள்வன்’ – டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்!

பாரதிராஜா & ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘கள்வன்’ – டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மே 14 முதல், இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கள்வன்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது . இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது. காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், அற்புதமான விஷுவல், மயக்கும் இசை மற்றும் நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு என “கள்வன்” படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்தது. அரசின் வனக்காப்பாளராக மாற விரும்பும் திருடன் கெம்பன், அந்த வேலையில் சேர அவனுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் தேவைப்படுகிறது. அந்த பணத்தைத் திரட்ட அவன் எடுக்கும் முடிவுகள், அவனை எதிர்பாராத பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. அதிலிருந்து அவன் விடுபட்டானா?…
Read More
ப்ளாக்பஸ்டர் “பிரேமலு”, ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்!!

ப்ளாக்பஸ்டர் “பிரேமலு”, ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்!!

    தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12, 2024 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. கிரிஷ் A D இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதராபாத்தில் அவன், ஐடி துறையில் பணிபுரியும் ரீனுவைச் சந்திக்கிறான், அவர்கள் நண்பர்களாகிறார்கள். சச்சின் ரீனுவை ஒருதலையாகக் காதலிக்க…
Read More
ஓஸ்லர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் !!

ஓஸ்லர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் !!

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படமான “ஆபிரகாம் ஓஸ்லர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லரான 'ஆப்ரஹாம் ஓஸ்லர்’ திரைப்படத்தை, ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நட்சத்திர நடிகர் மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியுள்ள இப்படத்தினை ரந்தீர் கிருஷ்ணன் எழுதியுள்ளார். தொடர் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக, திருச்சூரில் உள்ள காவல்துறை உதவி ஆணையரான ஓஸ்லரின் முயற்சிகளைப் பற்றிய படம் தான் ஓஸ்லர். ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வைத்திருக்கும் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ஓஸ்லர் வாழ்வில் அவருக்கு ஏற்படும் தனிப்பட்ட சோகத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியாத நேரத்தில், காவல் துறை சந்தித்த மிகக் கடினமான வழக்குகளில் ஒன்றான, புத்திசாலித்தனமான, இரக்கமற்ற சீரியல் கில்லர்களை எதிர்கொள்கிறார் ஓஸ்லர். இன்சாமினியா எனும் தூக்கமின்மை மற்றும் ஹாலுசினேஷன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஓஸ்லர்,…
Read More
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!! கொச்சி 15 மே 2023 : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் இன்வஸ்டிகேசன் பின்னணியில், ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின்…
Read More
“கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா”  சீரிஸின் டீசர் வெளியானது !!

“கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசர் வெளியானது !!

  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் இன்வஸ்டிகேசன் பின்னணியில், ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின் சவால்மிகுந்த கொலை வழக்கினை விசாரிக்கிறார்கள் அவர்களுக்குக் கிடைக்கு ஒரே ஒரு க்ளூ ஒரே ஒரு பெயர் மற்றும் லாட்ஜின் லெட்ஜரில் பொறிக்கப்பட்ட - "ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா" எனும் போலி முகவரி. இந்த சிக்கலான சவால்…
Read More
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ !!

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக 'லேபிள்' தொடரை அறிவித்துள்ளது!! இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் தொடர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த தொடருக்கு 'லேபிள்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளான 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' போன்ற சூப்பர்ஹிட் படங்களை வழங்கிய பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், மாறுபட்ட களத்தில் 'லேபிள்'வெப் சீரிஸை இயக்குகிறார், இந்த தொடரின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது. 'லேபிள்' வெப் சீரிஸின் கதையை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் CS இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் B. ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தின் எடிட்டராகவும், வினோத் ராஜ்குமார் கலை…
Read More
7 மொழிகளில் வெளியாகும் ஹாட்ஸ்டாரின் ‘ஆர் யா பார்’ இணைய தொடர்!

7 மொழிகளில் வெளியாகும் ஹாட்ஸ்டாரின் ‘ஆர் யா பார்’ இணைய தொடர்!

உயிர், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தை கண்முன் நிறுத்தும்  ‘ஆர் யா பார்’ இணையதொடர் டிசம்பர் 30, 2022 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் அடுத்த ஒரிஜினல் வெளியீடான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் பிரிவில் ‘ஆர் யா பார்’ தொடரின் அசத்தலான டிரெய்லரை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டது. ஒரு சாதாரண மனிதன் பின்தங்கிய நிலையில் உள்ள தன் பழங்குடியினரைக் காப்பாற்றி நவீன உலகில் வாழ முயலும் கதை தான் இந்த தொடர். ஆக்‌ஷன்- கலந்த இந்த டிராமா தொடரை சித்தார்த் சென்குப்தா உருவாக்கியுள்ளார். Edgestorm Ventures LLP சார்பில் ஜோதி சாகர் மற்றும் சித்தார்த் சென்குப்தா தயாரித்துள்ளனர். க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்தத் தொடர் டிசம்பர் 30, 2022…
Read More
த்ரில்லர் மிஸ்டரி தொடரான ‘ஃபால்’ இணைய தொடர்  இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது

த்ரில்லர் மிஸ்டரி தொடரான ‘ஃபால்’ இணைய தொடர்  இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது

  சென்னை, டிசம்பர் 09: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஃபால்’ இணைய தொடரினை  வெளியிட்டுள்ளது. இத்தொடரில் நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடர் வெளியாவதற்கு முன்னதாக, டிசம்பர் 8ஆம் தேதி வியாழன் அன்று, இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தின் சிறப்புக் காட்சி ஊடகங்களுக்காக திரையிடப்பட்டது. 'ஃபால்' இணைய தொடரின் சிறப்பு திரையிடலுக்கு ஊடகவியலாளர்களை வரவேற்றுப் பேசிய ஹாட்ஸ்டார் தமிழ் - தலைமை நிர்வாகி கிருஷ்ணன் குட்டி கூறியதாவது.., "'ஃபால்' தொடரை உருவாக்கியதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், இதில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் விரும்பும் சிறந்த தமிழ் கதைகளை அனைவருக்கும் சேரும்படி தயாரிக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.  நாங்கள் இத்தொடரை 7 மொழிகளில் வெளியிடுகிறோம். திரையுலகில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், இந்தத் தொடரின் இயக்குநருமான சித்தார்த் ராமசாமி கூறியதாவது, “நான் இயக்குநராக அறிமுகமாகும் தொடர் ‘ஃபால்’. நான் ஒளிப்பதிவாளராக…
Read More
டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘(Fall) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!!  

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘(Fall) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!!  

ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் “ஃபால்” இணைய தொடரின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியானது. இந்த தமிழ் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. சென்னை (நவம்பர் 25, 2022 ) இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  மிகவும் எதிரப்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஃபால் ‘( Fall ) தொடரின் டிரெய்லரை இன்று வெளியிட்டது. அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த “ஃபால்”  தொடர் "வெர்டிஜ்"  எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இத்தொடரினை பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் இந்த ‘ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்’  தொடர் டிசம்பர் 9 முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை அஞ்சலி, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி  நட்சத்திரங்கள் இத்தொடரில்…
Read More