ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘ஜாக்சன் துரை’ படத்தின் இரண்டாம் அத்தியாயம் கோலாகல துவக்கம் !!!

 

இயக்குநர் PV தரணிதரன் இயக்கத்தில் புரட்சித் தமிழன் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் நடிப்பில், வெற்றிப் படம் ஜாக்சன் துரை படத்தின் கூட்டணி தற்போது மீண்டும் “ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்” படத்தில் இணைகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை Sri Green Productions நிறுவனம் மற்றும் I Dream Studios நிறுவனம் சார்பாக, M.S.சரவணன் மற்றும் S.R.பாத்திமா தயாரிக்கிறார்கள்.

ஜாக்சன் துரை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், மாறுபட்ட பின்னணியில் இப்படம் உருவாகிறது.1940-ல் ஊட்டியின் அருகிலுள்ள கிராம பின்னணியில் நடக்கும் கதையில், பிரிட்டிஷ் கால கட்டத்தைக் கொண்டு வருவதற்காகப் படக்குழுவினர் மிகுந்த ஆராய்ச்சி செய்து, அக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டிடங்களைக் கண்டுபிடித்து, அதே போல் செட் அமைத்து படமாக்கவுள்ளனர்.

Image
இப்படத்தில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சம்யுக்தா , மனிஷா ஐயர், சரத் ரவி, பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் ஆகியோருடன் மற்றும் தமிழ் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

படத்தைப் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.