உலகம் முழுவதும் 7000 கோடி வசூல் செய்த அவதார் 2!

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் உலகம் முழுவதும் பார்வையாளர்களின் நம்பர் 1 தேர்வாக இருந்து ரூ. 7000 கோடி வசூல் செய்துள்ளது; இந்தியாவில் ரூ. 300 கோடி+ GBOC வெறும் பத்து நாட்களில் வசூல் செய்துள்ளது!

இந்தத் தலைமுறை பார்வையாளர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றத் திரைப்படமாக ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் உள்ளது. தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இந்தியாவில் வெளியான பத்தே நாட்களில் ரூ. 300 Cr+ GBOC வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ’அவென்ஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்திற்குப் பிறகு ‘அவதார்’ திரைப்படம் இரண்டாவது மிகப்பெரிய ஹாலிவுட் படமாக இந்தியாவில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்திற்கும் கிடைத்திராத மிகப்பெரிய வகையில், குடும்பத்தினர் கொண்டாடும் பொழுதுபோக்குப் படமாகவும் பிரம்மாண்டமான காட்சிகளைக் கொண்ட படமாகவும் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்திருக்கிறது ‘அவதார்’. தொடர்சியான விடுமுறைகள் மற்றும் ‘அவதார்’ படத்திற்கு எந்த ஒரு போட்டியும் வரும் வாரத்திலும் இல்லாததால் பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றின் பல சாதனைகளை முறியடித்து, புதிய பல சாதனைகளைப் படைத்து வருகிறது ‘அவதார்’ திரைப்படம்.

’அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.