கிளாப் திரை விமர்சனம் !

 

இயக்கம் – பிரித்வி ஆதித்யா
நடிகர்கள் – ஆதி, ஆகான்ஷா சிங்க், கிரிஷா குரூப்

கதை -தோல்வியடைந்த ஒரு ஒட்டப்பந்தய வீரன், ஒரு கிராமத்து சிறுமிக்கு டிரெய்னிங்க் கொடுத்து அவளை சாம்பியன் ஆக்குவதே கதை

காலம் காலமாக ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களுக்கு இரண்டே ஃபார்மேட் தான் ஒன்று கஷ்டப்படும் நாயகன் பல தடைகள் கடந்து ஜெயிப்பது, இல்லை தோல்வியுற்ற நாயகன் திறமையுள்ள ஒருவருக்கு பயிற்சி தந்து ஜெயிக்க வைப்பது இது இரண்டாவது வகைப்படம்

ஒரு நல்ல எமோஷனல் டிராமா நல்ல ஸ்போர்ட்ஸ் படமா வந்திருக்க வேண்டிய படம் நல்ல திரைக்கதை இருந்தாலும் மேக்கிங்க் குறைகளால் இந்த படம் சுமாரான படமா ஆகியிருக்கு.

ஒரு ஆக்சிடென்ட்ல கால்ல அடிபடுற நாயகன் ஆதி, அவரோட ஓட்டப்பந்தய கனவ இழக்க வேண்டியதாகிவிடுகீறது. இதனால் அவர் மன அழுத்தத்துகுள்ளாக திருமண வாழ்க்கையில் பிரச்சனை வருது, அப்போ அவர் ஒரு கிராமத்து சிறுமிய சந்திக்கிறாரு. அந்த பெண்ண பல தடைகள் தாண்டி எப்படி சாம்பியன் ஆக்குறாருங்கறது தான் படம்,


ஆதிக்கும் அவரோட மனைவி ஆகான்ஷாவுக்குமான காட்சிகள் படத்தோட முக்கியமான் ஸ்போர்ட்ஸ் காட்சிகள விட உணர்வுப்பூர்வமா வந்துருக்கு. பல படங்கள்ல பார்த்த டிரெய்னிங்க் காட்சி அதே பழைய கதை

ஆதி தோற்றுப்போய் வெற்றிக்கு ஏங்க்குற விளையாட்டு வீரனா கலக்கியிருக்காரு. ஆகான்ஷா சிங்க், கிரிஷா குரூப் இரண்டு பேரும் அவங்க பாத்திரத்த சிறப்பாவே செஞ்சிருக்காங்க.

பார்த்து பார்த்து பழகிய திரைக்கதை, மேக்கிங்க்லயும் எந்த புது விசயம் இல்லாதது இந்தப்படத்த போரடிக்க வைக்குது. இளையராஜா இசை மனசுக்கு இதமா இருக்கு. கேமரா சிறப்பான வேலைய செஞ்சிருக்கு.

மோட்டிவேசன் விரும்பறவங்க பார்க்கலாம் சோனி லிவ் ல இருக்கு.