அஷ்டகர்மா – விமர்சனம்

 

படித்து டாக்டராக இருக்கும் பகுத்தறிவுவாதி கடவுளையே நம்பாத அவருக்கு அமானுஷ்ய பேய் சம்பவங்கள் நிகழந்தால் என்ன செய்வார் இது தான் அஷ்டகர்மா படத்தின் கதை

புது முயற்சியாக எடுக்கப்பட்டிருந்தாலும் ஒரு அழகான திரைகதையில் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கதாநாயகியை எப்போதும் ஏதோவொரு பிரச்சனை துரத்திக்கொண்டே இருக்கிறது. அலசி ஆராய்ந்தால், அவரது குடும்பத்தில் ஒருவர் வைத்த செய்வினைதான் காரணம் என்பதும், செய்வினை வைத்தது ஏன் என்பதும் தெரியவந்து அதிர்ச்சியூட்டுகிறது.

அந்த செய்வினையிலிருந்து மீண்டுவர அவர் என்ன செய்தார் என்பதே படம். ஒரு கதாசிரியர் ஒருவர் காகிதத்தில் எழுதும் கதை அப்படியே நிஜமாக நடப்பதும், அமானுஷ்யமான அந்த வீட்டில் ஏதோ ஒரு சக்தி இருந்துகொண்டு எல்லோரையும் பயமுறுத்துவது என ஒரே இடத்தில் நிகழும் கதையாக இருந்தாலும் நம்மை திகிலூட்டி பயமுறுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய் தமிழ்செல்வன்.

அறிமுக நாயகன் சி.எஸ்.கிஷனுக்கு இதுதான் முதல் படம். கிஷன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் வருகிறது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் நிச்சயம் மிளிரலாம். ஷிரிதா சிவதாஸ், நந்தினி ராய் ஆகியோர் பாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை செய்துள்ளார்கள்.

ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக திகில் காட்சிகளில் நம்மை பயமுறுத்தியுள்ளார்.
டி.ஆர். எழுதி பாடிய பாடல் ஒன்றும் படத்தில் இருக்கிறது என்றாலும் காதையும் கவரவில்லை. பில்லி சூன்யத்திற்காக வேதத்தை இழுப்பதெல்லாம் ஓவர்.

திகில் ஹாரர் படங்களை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.