ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘100% காதல்’- ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு!

இசை அமைப்பாளர் என்பதை விட நாயகனாக படு பிசியாகி விட்ட ஜி.வி. பிரகாஷ் குமார் கை வசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு’ என அடுத்தடுத்து படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் ‘100% காதல்‘ படம் தெலுங்கில் 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘100% லவ்’ படத்தின் ரீமேக்காம்.

சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் நாகசைத்தன்யா, தமன்னா டூயட் பாடி ஆடியிருந்தனர். இதன் தமிழ் ரீமேக்கை இயக்குநர் சுகுமாரின் ‘கிரியேட்டிவ் சினிமாஸ் NY’ நிறுவனத்துடன் இணைந்து ‘NJ எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.எம்.சந்திரமௌலி இயக்கவுள்ள இந்த படத்தில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடவுள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனராம். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கவுள்ள இதற்கு கணேஷ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை லண்டனில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் இப்படத்தின் படம்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. அதற்கான பூஜை இன்று காலை ஏவிஎம் உள்ள பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது.

முன்னரே குறிப்பிட்டது போ இப்படம் 2011-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கில் வெளியான 100% லவ் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தின் தமிழ் ரீமேக்கே ‘100% காதல்’ என்பது குறிப்பிடத்தக்கது.