இந்தத் திரைப்படம் பலரது கண்களை திறக்கும்! ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஜோதிகா!

இந்தத் திரைப்படம் பலரது கண்களை திறக்கும்! ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஜோதிகா!

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.‌ பார்வை திறன் சவாலுள்ள மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் சாக் இன் சீஸ்…
Read More
சந்திரமுகியை பாராட்டிய ஜோதிகா ! கங்கனா ரனாவத்தை மனமாற வாழ்த்தியுள்ளார்!

சந்திரமுகியை பாராட்டிய ஜோதிகா ! கங்கனா ரனாவத்தை மனமாற வாழ்த்தியுள்ளார்!

  'சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தைப் பாராட்டி, நடிகை ஜோதிகா சமூக ஊடகத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் நட்சத்திர நடிகரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இத்திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, 'சந்திரமுகி 2' படத்தின் வெளியீட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில், சந்திரமுகி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தின் தோற்றம், கதாபாத்திரம் ஆகியவை…
Read More
வெளியானது சூர்யாவின் அடுத்த பட டீசர்

வெளியானது சூர்யாவின் அடுத்த பட டீசர்

  தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம். அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வெளியாகவுள்ள நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் பரபரப்பான டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது. தங்களுக்கென…
Read More
தீபாவளிக்கு வெளியாகும் சூர்யா படம்

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யா படம்

சூரரை போற்று திரைப்படத்திற்கு பிறகு, சூர்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'ஜெய் பீம்'. இந்த திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கி வருகிறார்.  சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது .இந்தப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. தீபாவளிக்கு அமேஷான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் இப்போது வெளியாகி உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும்படியான, வன்முறை  காட்சிகள் படத்தில் இருக்கிறது. இது மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் படமாக இருக்கும் என படக்குழு நம்பிவருகீறார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
Read More
error: Content is protected !!