Latest Posts

மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

இந்த கோலிவுட் சினிமா எத்துணையோ படைப்பாளிகளைக் கண்டிருக்கிறது.. கண்டு கொண்டுமிருக்கிறது.. அப்படியான படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்து மனதில் வாழ்கிறார்கள். அப்படியான லிஸ்டில் ஒருவரான...

சந்தோஷ் நாராயணன் : பிறந்த நாள் சிறப்புப் பதிவு!

கோலிவுட்டோ, ஹாலிவுட்டோ- எங்கே ஆனாலும் இசையமைப்பாளர் ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு பாணி இருக்கும், இதில் ஏனைய இசையமைப்பாளார்களிடம் இருந்து சந்தோஷ் நாராயணனின் இசை சற்று வித்யாசமாகவே இருக்கும். குறிப்பாக இவர் இசையமைக்கும் படங்கள்...

சிம்பு & ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி வழக்கு!

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மஹா’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும். ஹன்ஸிகாவின் முன்னாள்...

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அனைத்திந்திய படமான புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன்...

கொரோனா தனிமையால் உருவான “Thousand Kisses” வீடியோ பாடல் !

இரண்டு பொம்மைகளை மட்டும் வைத்து கொண்டு, கோவிட் பொதுமுடக்கத்தில் தன்னை நோய் தாக்கிய நிலையிலும், வீட்டுக்குள் தனியாளாக இருந்து ஒரு அழகான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ்.

“Thousand Kisses” எனும் இப்பாடல் உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் கூறியது…

ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா கிளம்பிக்கொண்டிருந்தேன், அப்போது தான் பொது முடக்கம் அறிவிக்கப் பட்டது . அடுத்த சில நாட்களில் எனக்கு கோவிட் – 19 உறுதியானது. மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த பிறகு என்னை தனிமைb படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. தனிமை கொடியதாக இருந்தது. தனிமையை போக்க ஏதாவது செய்ய நினைத்தேன் அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. முதலில் வெறும் வீடியோவை தான் படம் பிடிக்க ஆரம்பித்தேன். பின்னர் என்னிடமிருந்த இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்துகொண்டு, ஒரு வீடியோவை படம்பிடிக்க துவங்கினேன். மனைவியின் கண்டிப்பால் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. வீட்டுக்குள்ளாகவே பல பின்னணிகளை உருவாக்கி படம் பிடிக்க துவங்கினேன்.

பின்னர் எனது கிரியேட்டிவ் புரடியூசர் தீபன் M, கலரிஸ்ட் நந்தார், எடிட்டர் PK ஆகியோருடன் உரையாடினேன். அவர்களது அறிவுரைகள் பேருதவியாக இருந்தது. என் மனைவியின் மொபைலில் தான் இந்த வீடியோவை படம்பிடித்தேன். அதில் குளோசப் அதிகம் செல்ல முடியாது. ஒளியமைப்பை முழுக்க நானே செய்ய வேண்டி யிருந்தது. வீட்டில் இருந்த பொருட்களை பயன்படுத்தி பல பின்னணிகளை தனியாளாக உருவாக்க வேண்டியிருந்தது. மொட்டைமாடி, குளியலறை ஷவர் என பல இடங்களில் புதுமையான பின்னணியை உருவாக்கி படம்பிடித்தேன். தீபாவளி நாளில் பட்டாசுகளின் பின்னணியிலும் வீடியோ எடுத்துள்ளேன். இவ்வீடியோவிற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியை அணுகினேன்.

வீடியோ பார்த்த அவர் கொரியன் பாப் பாடல் உள்ளது என பாராட்டினார். அடுத்த 24 மணி நேரத்தில் முதல் பிரதியாக ஒரு இசையை தந்தார். பின்னர் ஒரு மாதத்தில் முழுப்பாடலும் உருவாகி விட்டது. பாடலை பார்த்து விட்டு என்னுடைய குரு ரவி K சந்திரன் அவர்கள், விஜய் மில்டன், GK விஷ்ணு, தினேஷ் கிருஷ்ணன் என பலரும் வியந்து பாராட்டினார்கள். தற்போது ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். பாடலுக்காக உழைத்த கடினமான தருணங்களை இந்த பாராட்டுக்கள் போக்கிவிட்டது. அடுத்த பயணத்திற்கும் பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி கூறியதாவது…

முதன் முதலாக ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் இந்த வீடியோவுடன் என்னை அணுகிய போது பிரமித்து போனேன். எப்படி இவரால் இப்படி ஒரு அற்புதத்தை தனியாக செய்ய முடிந்தது என ஆச்சர்யமாக இருந்தது. உலகம் முழுதும் மனிதர்கள் இல்லாத வீடியோ பாடல்களில் பல முயற்சிகள் நடந்திருக்கிறது ஆனால் இங்கே அது மாதிரி நிகழ்வுகள் எதுவும் பெரிதாக நிகழ்ந்ததில்லை. ஒரு கொரியன் பாப் பாடலை பார்க்கும் அனுபவம் இந்த வீடியோவில் இருந்தது. அற்புதமான இசையை உருவாக்கும் தூண்டலை எனக்கு தந்தது. அவருடன் கலந்துரையாடி அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு பாடலில் முதல்பிரதி இசையை உருவாக்கினோம். ஒரு மாதத்தில் பாடலின் முழு வடிவமும் அழகாக உருவாகி வந்தது. “Thousand Kisses” எனும் இந்த அற்புதமான ஆல்பத்தில் எனது பங்கும் இருப்பது பெரும் மகிழ்சையை தந்துள்ளது.

டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி K சந்திரன் அவர்களிடம் உதவி யாளராக பணியாற்றியவர். தமிழில் “ஜீலை காற்றில்” படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “தர்பார்” படத்தின் புரமோ பாடலுக்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Latest Posts

மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

இந்த கோலிவுட் சினிமா எத்துணையோ படைப்பாளிகளைக் கண்டிருக்கிறது.. கண்டு கொண்டுமிருக்கிறது.. அப்படியான படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்து மனதில் வாழ்கிறார்கள். அப்படியான லிஸ்டில் ஒருவரான...

சந்தோஷ் நாராயணன் : பிறந்த நாள் சிறப்புப் பதிவு!

கோலிவுட்டோ, ஹாலிவுட்டோ- எங்கே ஆனாலும் இசையமைப்பாளர் ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு பாணி இருக்கும், இதில் ஏனைய இசையமைப்பாளார்களிடம் இருந்து சந்தோஷ் நாராயணனின் இசை சற்று வித்யாசமாகவே இருக்கும். குறிப்பாக இவர் இசையமைக்கும் படங்கள்...

சிம்பு & ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி வழக்கு!

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மஹா’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும். ஹன்ஸிகாவின் முன்னாள்...

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அனைத்திந்திய படமான புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன்...

Don't Miss

MGR -ன் உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது. இப்படத்தில்,...

கொரோனா தனிமையால் உருவான “Thousand Kisses” வீடியோ பாடல் !

இரண்டு பொம்மைகளை மட்டும் வைத்து கொண்டு, கோவிட் பொதுமுடக்கத்தில் தன்னை நோய் தாக்கிய நிலையிலும், வீட்டுக்குள் தனியாளாக இருந்து ஒரு அழகான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ். “Thousand Kisses”...

அன்பிற்கினியாள் – விமர்சனம்!

முழுமையாக ஆன் லைன் யுகமாகி விட்ட இந்த கொரோனா காலத்திலும் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லும் கூகுளில் அப்பா-மகள் கதை என்று டைப்-பிட்டு சர்ச் செய்து பாருங்கள்.. அந்த கூகுள் நடத்தும் குடும்பதாரரின்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.