Tuesday, November 24, 2020

எதிர் வினையாற்று படத்தின் டிரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி...

Latest Posts

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி!

செகுந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளியில் படித்த ஹைதராபாத் பெண், அம்ரின் குரேஷி இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறை யில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த இரண்டு...

புரொடியூசர் கவுன்சில் எலெக்‌ஷன் : தேனாண்டாள் முரளி தலைமை வெற்றி!

சென்னை பிலிம் சேம்பர் வளகத்தில் உள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இசசங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. நடிகர் கமல்ஹாசன்...

காவல்துறை உங்கள் நண்பன்’ – நவம்பர் 27 ரிலீஸ்!

ஆர்.டி.எம் இயக்கியுள்ள 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை...

மானே நம்பர் 13 கன்னட திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ்!

உங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் மானே நம்பர் 13 கன்னட திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் காண தயாராகுங்கள். ஆம்.. மானே நம்பர் 13 திரைப்படம்...

இயற்கை நமக்காக ஒரு பாடல் பாடினால், எவ்வாறு இருக்கும்? இதோ கேளுங்க!

மனிதன் இயற்கையைப் புறக்கணித்து தீங்கு செய்வதைக் கண்டித்தும் எச்சரித்தும், இயற்கை மனிதர்களுக்குப் பாடுவதாக ஓர் ஒற்றைப் பாடல் ஆல்பம் உருவாகியிருக்கிறது. இதை இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் உருவாக்கியிருக்கிறார். இவர் வெண்ணிலா வீடு, சோன்பப்படி, டீக்கடை ராஜா, விசிறி, நிழல் உலகம், ரிங் ரோடு (கன்னடம்), ரகு, கீழக்காடு ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குறும் படங்களுக்கும், விளம்பரப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

“நீயே பிரபஞ்சம்” இந்த ஒற்றைப் பாடல் முயற்சி பற்றி அவர் பேசும் போது, “இது என் குழு படைப்பு. இந்தப்பாடல் எதைச் சார்ந்தது என்றால், வெகுநாட்களாகவே இயற்கையை மனிதர்களாகிய நாம் இழிவு செய்து கொண்டே இருக்கிறோம்; சேதப்படுத்தி கொண்டே இருக்கிறோம்;எல்லாமும் நமக்கு வழங்கிய இயற்கையை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. பல வகையிலும் இயற்கைக்கு எதிராகவும் இருக்கிறோம். இறைவன் இயற்கை யையும் உயிரினங்களையும் படைத்தான். மனிதன் படைத்தவனை உதாசீனப்படுத்தி, இயற்கையையும் உயிரினங்களையும் கொடுமை செய்கிறான், கொலை செய்கிறான், மாசு படுத்துகிறான், தான் இயற்கையுடன் சார்ந்து வாழ்வதை மறந்து, செயற்கை வழியில் சென்று மிருகமாக மாறிவிட்டான்.அனைத்து உயிர்களுக்கும் இயற்கைக்கும் அநீதி செய்கிறான். அவனுக்குத் தெரியாது, இயற்கை ஒரு நாள் அவனை ‘வச்சு செய்யும்’ என்று.

தற்போது உலகமே முடங்கி கிடக்கிறது, மனித உயிர் இனங்களைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் மிக மகிழ்ச்சியாய், சுதந்திரமாய் இன்புற்று வாழ்கின்றன. தற்போது வந்திருக்கும் கொரோனா, மனித இனத்திற்கு ஓர் எச்சரிக்கை. தன்னிலை மறந்த மனிதனுக்கு, அதிரவைக்கும் ஒரு நினைவூட்டல். இனிவரும் காலங்களுக்கு இயற்கைக்குத் துணையாக மனித இனம் நிச்சயம் இருக்கும். தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த பாடல், மேலே கூறிய அனைத்து கருத்துகளும் உள்ளடங்கியது.” என்கிறார்.

‘நீயே பிரபஞ்சம்’ என்கிற தலைப்பில் இதற்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் எஸ். ஞானகரவேல் எழுதி இருக்கிறார்.

‘வானமாய் நின்று கையசைத்தேன்

பூமியால் உன்னை நான் அணைத்தேன்

பச்சை இலைகளில் புன்னகைத்தேன்

சென்றாய் என்னை புறக்கணித்தே’ என்று தொடங்குகிறது பாடல் .

‘கடவுளை நீ தினம் தேடியே அலைகிறாய் எங்கோ?

இயற்கையும் தெய்வமும் ஒன்றென நீ உணரும் நாள் என்றோ ?

என்று செல்கிற இப் பாடல்,
‘நீர் நிலம் காற்று நான்,
ஆகாயம் நெருப்பு நான் ,
பேரண்ட வெளிச்சம் நான்,
பிரபஞ்ச இருட்டும் நான்’ என்று விரிந்து செல்கிறது.

தன்ராஜ் மாணிக்கம் மேலும் பேசும்போது “இயற்கை கொடூரமாய் ஆடியதை பார்த்துள்ளோம், பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதுவே,இயற்கை நமக்காக ஒரு பாடல் பாடினால், எவ்வாறு இருக்கும்? அதுதான் இந்தப் பாடல் “நீயே பிரபஞ்சம்” இந்தப் பாடலை நான் இசையமைத்து பாடியும் உள்ளேன். மேலும் டிரெண்ட் மியூசிக் இப்பாடலின் உரிமைகளைப் பெற்றுள்ளது. மனிதனுக்கு தற்போது மிக அவசியமான கருத்துப் பாடல். “என்கிறார் திருப்தியுடன்.

பாடல்: நீயே பிரபஞ்சம்

இசை: தன்ராஜ் மாணிக்கம்

பாடல் வரிகள்:
ச. ஞானகரவேல்

பாடல் மையக்கருத்து:
மனோஜ் முருகன்

படத் தொகுப்பு:
ராம் கோபி

தயாரிப்பு:
DM புரொடக்சன்ஸ்

Latest Posts

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி!

செகுந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளியில் படித்த ஹைதராபாத் பெண், அம்ரின் குரேஷி இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறை யில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த இரண்டு...

புரொடியூசர் கவுன்சில் எலெக்‌ஷன் : தேனாண்டாள் முரளி தலைமை வெற்றி!

சென்னை பிலிம் சேம்பர் வளகத்தில் உள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இசசங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. நடிகர் கமல்ஹாசன்...

காவல்துறை உங்கள் நண்பன்’ – நவம்பர் 27 ரிலீஸ்!

ஆர்.டி.எம் இயக்கியுள்ள 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை...

மானே நம்பர் 13 கன்னட திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ்!

உங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் மானே நம்பர் 13 கன்னட திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் காண தயாராகுங்கள். ஆம்.. மானே நம்பர் 13 திரைப்படம்...

Don't Miss

சென்னை சர்வதேச திரைப்பட விழா : பிப்ரவரி 18 முதல் 25 வரை நடத்த முடிவு!

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்புக் குழுவான இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஃபவுண்டேஷன் ( Indo Cine Appreciation Foundation) தரப்பில் அனைத்து ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த திரைபட விழாவின்...

ஹைதராபாத்தில் உலகத் தரமான திரைப்பட நகரம் – தெலுங்கானா முதல்வர் தகவல்!

ஹைதராபாத்தில் விமான இறங்குதளத்துடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். நேற்று (08.11.20) தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா உள்ளிட்டோர் தெலங்கானா வெள்ள நிவாரண...

சிம்பு நடிச்ச ஈஸ்வரன் படம் ரெடி -அடுத்த படமான ‘மாநாடு’ ஷூட்டிங்கிற்கும் தயாராம்!

இயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நல்ல பெயர் உண்டு. “ஏக் தம்மில் ஒரு படத்தை முடித்துவிடுவார்…” என்பார்கள் தமிழ்த் திரையுலகத்தினர். இந்த நிலையில், சிம்புவை வைத்து சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க...

டில்லி பாபு தயாரிப்பில் 4 டைரக்டர்கள் வழங்கும் நான்கு ‘விக்டிம்’ கதைகள் கொண்ட திரைப்படம்!

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம், ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்.’ தயாரிப்பாளர் G.டில்லிபாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழ் சினிமாவில் சீரான தனிப் பாதையில் பயணித்து, மதிப்புமிகு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. 2014-ல் ஆரம்பித்த இந்த...

சம்சாரம் அது மின்சாரம் 2 வரப் போகுதாம் – விசு ரோலில் ராஜ் கிரண்?

'சம்சாரம் அது மின்சாரம் 2' திரைப்படம் உருவாகவுள்ளது. இதில் நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. நம் நாட்டில் அதிகமாக இருக்கு நடுத்தர குடும்ப உறவுகளை மையப்படுத்தி விசு இயக்கத்தில் வெளியான படம்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.