இந்தியா மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் மும்பையை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஸ்ரீகாந்த் பாஷி என்பவரால் 2014ம் ஆண்டு கார்னிவெல் சினிமாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அது முதல் இதுவரை 104 நகரங்களில் 400 முதல் 500 ஸ்கிரீன்களை நிறுவி , பலமல்டிபிளக்ஸ் திரையரங்கங்களை , நல்ல முறையில் நிர்வாகித்து வரும் “கார்னிவெல் சினிமாஸ் ” நிறுவனம் ,சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி சிட்டியில் ஒரே வளாகத்தில் 6 திரையரங்கு களை மிகப் பிரமாண்டமாக நிறுவி .அண்மையில் கோலாகலமாக திறந்துள்ளது.
EVP – கார்னிவெல் சினிமாஸ் எனும் பெயரில் திகழும் இந்த மல்டி பிளக்ஸில் உள்ள 6 திரையரங்கு களில் ஸ்கிரீன் -1 ல் 213 இருக்கைகளும் , ஸ்கிரீன் -2 மற்றும் 5-ல் 323,ஸ்கிரீன் 3 & 4 – ல் 221 ,ஸ்கிரீன்- 6 ல் 214 … இருக்கைகளுமாக இந்த ஒரு மல்டி பிளக்ஸின் 6 திரையரங்குகளில் மட்டும் கிட்டத்தட்ட 1500 இருக்கை வசதிகள் உள்ளன. அதே மாதிரி இஙகுள்ள ஒரு திரையரங்கம்
4-கே புரஜக்ஷன் வசதியும் மீதி 5 திரையரங்கங்கள் 2 -கே புரஜக்ஷன் வசதியும் கொண்டவை.
மேலும், இத்திரையரங்க வளாகத்தில் தமிழக திரையரங்கங்களில் இதுவரை இல்லாத வசதியாக மகளீருக்கென பிரத்யேகமாக பிங்க் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இத்தனை வசதிகள் , இத்தனை பிரமாண்டம் இருந்தும் தமிழக அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணமும் , அரசு அறிவுரைத்த மாதிரி ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வார நாட்களில் 4 காட்சிகளும் , வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 5 காட்சிகளும் திரையிடப்படவுள்ளது.
சென்னையில் EVP சிட்டியில் நடந்த இந்த “EVP – கார்னிவெல் சினிமாஸ் ” மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் கோலாகல தொடக்க விழாவை EVPகுரூப் நிர்வாகி ஈ.வி.பெருமாள்சாமி , அவரது மகனும் ஈவி.பி குரூப் எம்.டியுமான சந்தோஷ் ரெட்டி ,கார்னி வெல் எம்.டி P.V.சுனில் , கார்னிவெல் சென்னை நிர்வாகி ஜுனித் உள்ளிட்டோர் தங்கள் குடும்ப சகிதமாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அவர்களுடன் பிரபல படத்தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு , பி.எல்.தேனப்பன் , வினியோகஸ்தர் அருள்பதி , இயக்குனர்கள் மிஷ்கின், ராம் , பாபு கணேஷ் , நட்சத்திரங்கள் வைபவ், சவுந்திரராஜன் , ‘பேரன்பு ‘ சாதனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து ,இந்த EVP – கார்னிவெல் சினிமாஸ் ஸ்கிரீன் – 2 வின் பிரமாண்ட அகண்ட திரையில் , காண்போர் , கண்ணையும் கருத்தையும் கவரும் டால்பி எஃபெக்ட் படமும், “விஸ்வாசம்” படத்தில் இருந்து சில காட்சிகளும் விருந்தினர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப் பட்டு, இத்திரையில் “பேரன்பு” திரைப்படமும் முதன் முதலாக திரையிடப்பட்டது.
முன்னதாக., இவ்விழாவில் , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின்., “கடவுளுக்கு அப்புறம், நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரைகளைத்தான்.” எனவே , எல்லோரும் டி.வியில் சீரியல் பாருங்கள். இது மாதிரி பெரிய ஸ்கிரீனில் சினிமா பார்க்க வாருங்கள் பைரஸியை திருட்டு வி.சிடியை திரும்பி பார்க்காதீர்கள்” என்றார்.
இயக்குனர் ராம் எனது “பேரன்பு”முதல் சினிமாவாக இங்கு திரையிடப்படுவது சந்தோஷம் பெருமை… என்றார்.
அதன்பின் , பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட்டாக ,கார்னி வெல் எம்.டி P.V.சுனில் , கார்னிவெல் சென்னை நிர்வாகி ஜுனித் உள்ளிட்டோர் பதில் அளித்தனர் .
அதன் சாரம்சம் வருமாறு :-
2012 கொச்சின் ஏர்போர்ட் அருகே முதன்முதலாக . எங்கள் முதலாளி , டாக்டர். ஸ்ரீகாந்த் பாஷி ஒரு திரையரங்கை உருவாக்கினார். இன்று சிங்கப்பூர் , மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் கிட்டத்தட்ட 500 ஸ்கிரீன்கள் உள்ளன.
சென்னையில் முதல் பிக்கஸ்ட் மல்டி பிளக்ஸ் தியேட்டர் இதுதான். இன்னும் 2 வருடங்களில் 100 தியேட்டர்களை தமிழகத்தில் கார்னிவெல் உருவாக்கும் உலகளவில் 1000 திரையரங்குகள் திட்டமிட்டுள்ளோம். மேலும் , தமிழ் படத்தயாரிப்பிலும் , ,வினியோகத்திலும் நேரடியாகவும் இறங்க உள்ளோம்.
எங்களுடன் EVP M.D திரு.சந்தோஷ் இணைந்து இந்த EVP CARNIVAL மல்டி பிளக்ஸ் திரையரங்கத்தை உருவாக்கியதும் நாங்கள் இணைந்ததும் மிக்க மகிழ்ச்சி. அடுத்து ஆவடி மற்றும் ,மதுராந்தகம் அருகில் 6 ஸ்கிரீன் மல்டி பிளக்ஸ் தியேட்டர் உருவாக்க உள்ளோம்.
மேலும், சென்னை சிட்டிக்குள்ளும் புதிய மால்கள் கட்டப்பட்டால் கார்னிவெல் சினிமாஸ் அங்கும் கால் பதிக்கும்.அதுவரை இது மாதிரி சிட்டி லிமிட்டிற்கு வெளியே உருவாகியுள்ள தியேட்டருக்கு எங்கள் நிறுவனம் சார்பில் குறைந்த பட்சம் இரவு காட்சிகள் முடிந்தபின் போக்குவரத்து வசதியும் தர தீர்மானித்துள்ளோம். மற்றபடி , பாப்கான் முதல் பார்கிங்… வரை , மற்ற மால்களை விட மலிவாக தர பேசி வருகிறோம்.என்றனர்.