பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்ற உள்ளனர்.
ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமெரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும் தயாரிப்பளர்கள் T.G.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர்.
கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
Related posts:
ஆக்ஷன் ரோலில் மிரட்ட தயாரான நிகிஷா!February 8, 2018
பிரபாஸின் 'ப்ராஜெக்ட் கே' படத்திற்கு 'கல்கி 2898 AD' என பெயரை மாற்றியுள்ளனர்!July 22, 2023
கேரள கோவிலில் ஒலித்த புஷ்பா படத்தின் “ஏ சாமி” பாடல் !January 15, 2022
இன்டிவுட் திரைப்படவிழா! - டிசம்பர் 1 முதல் 5ம் தேதி வரை ஐதராபாத்தில் நடக்கிறது!November 15, 2018
டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளது!September 21, 2023