நெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “’எல்லாவற்றையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர் விட்டுச்சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள்? மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர். அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர்.
நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும்.
எதை எதையோ பள்ளிப்பாடங்களில் கற்றுத்தருபவர்கள் விவசாயம் குறித்து கட்டாயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
தமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே உழவு குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே அவர் விட்டுச்சென்ற பணியைத்தொடர கடமை இருக்கிறது!
நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். அது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.
Related posts:
போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் " சல்பர் "!March 9, 2021
இரண்டு ஜோடிகளுடன் சந்தானம். R.கண்ணன் இயக்கும் புதிய படம் !October 26, 2019
மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்!February 20, 2023
வசந்த் ரவியின் ஏழாவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!October 13, 2023
நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி இணையும், புதிய படம் “மாமன்” !!December 16, 2024