கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த ஆடு திருடு!

0
263

கடந்த வெள்ளி ரிலீஸாகி சக்சஸாக ஓடிக்கு கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த ஆடு திருடுபோனதாக ஆட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

வளசரவாக்கம் அன்பு நகரில் வசித்து வருபவர் வீரசமர். தமிழ் திரைப்படங்களில் கலை இயக்குநராக பணியாற்றும் இவர் , கடைக்குட்டி சிங்கம், மருது, கொம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக செம்மறி ஆட்டை வளர்த்து வந்தார். அதற்கு சைமன் எனவும் பெயரிட்டுள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருக்கும் இந்த ஆட்டை, வீட்டின் முன் பகுதியில் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு வீரசமர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் ஆட்டை திருடிச் சென்றதாக தெரிகிறது.

வியாழக்கிழமை காலை எழுந்து பார்த்த வீரசமர், ஆடு இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் , சைமன் என்ற அந்த ஆட்டுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வேனில் கடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கு காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.