‘டமால் டுமீல்’ படத்தை இயக்கிய ஸ்ரீ, எஸ்.ஆர்.ஜே. இருவரும் இணைந்து ‘காசுரன்’.. என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் ஸ்ரீ நாயகனாகவும், அங்கனா ஆர்யா நாயகியாகவும் நடித்துள்ளனர். உமரா நிவாசன், லாரன்ஸாக அவினாஷ், மாயாவாக கவிதா ராதேஷியாம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய கதை இது. பணம் ஒருவனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும் என்பதுதான் இந்தக் ‘காசுரன்’ படத்தின் கதைக் கரு.
கதையின் நாயகன் சிவா ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். ஜெஸ்ஸியின் தந்தை லாரன்ஸிற்கு சிவாவை பிடிக்காமல் போக, அவனைத் தன் செல்வாக்கை வைத்து பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் அடைக்கிறார். வா மனமுடைகிறான். ஜெஸ்ஸியும் தன் அப்பாவை வெறுக்கத் துவங்குகிறாள். பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து வெளியே வந்த சிவா உமர் என்கிற ரவுடியின் துணையில் லாரன்ஸிடம் இருந்து பணம் பறிக்க நினைக்கிறான்.
இதில் சிவா செய்த திட்டம்தான் என்ன.. உமர் சிவாவிடமிருந்து அந்தப் பணத்தைத் திருட என்ன செய்தான்.. ஜெஸ்ஸி இந்தத் திட்டத்தில் எப்படி மாட்டிக் கொண்டாள்.. சிவாவின் இத்திட்டம் அந்தக் குடும்பத்தில் எத்தனை பேரை பாதித்தது.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இத்திரைப்படம் 30 நண்பர்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி தயாரிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தமிழில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.