‘சூப்பர் பொண்ணு; சுமாரான பையன்’ பட ஷூட் ஸ்டார்ட் ஆயிடுச்சு!

0
277

தயாரிப்பாளர் பி.மோகனா, ஜீவன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சூப்பர் பொண்ணு; சுமாரான பையன்’. இந்தப் படத்தில் விஜய் கார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். இவரேதான் படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தில் மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, டேனியல், சுவாமிநாதன், செந்தில், ஷகிலா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.   ஒளிப்பதிவு – ஜீவன், இசை – ஸ்ரீகாந்த் தேவா, நடன இயக்கம் – சாண்டி, ராபர்ட், எழுத்து, இயக்கம் – விஜய் கார்த்திகேயன்.இந்த ‘சூப்பர் பொண்ணு; சுமாரான பையன்’ படத்தின் பூஜை நிகழ்வு நேற்று காலை ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள புதிய பிள்ளையார் கோவிலில் இனிதே நடைபெற்றது.

இந்த பூஜை நிகழ்ச்சியில் நடிகர்கள்   மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, டேனியல், சுவாமிநாதன், ஒளிப்பதிவாளர் ஜீவன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடன இயக்குநர்கள் சாண்டி, ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இப்படத்தை பற்றி படத்தின் இயக்குநரும், நாயகனுமான விஜய் கார்த்திகேயன் கூறுகையில், “நான் சிறிய வயது முதலே சினிமாவில் பயணிக்கிறேன். ‘வியாபாரி’ படத்தில் வடிவேலு மகனாகவும், ‘நான் கடவுள்’ படத்தில் ஆரியாவின் சின்ன வயது கதாபாத்திரத்திலும், ‘16’ என்கிற படத்தில் 2-வது நாயகனாகவும், ‘மீன் குழம்பும் மண்பானையும்’ முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். 

மேலும்  கே.பாக்யராஜ், அப்புக்குட்டி ஆகியோருடன் இணைந்து ‘குஸ்கா’ படத்தில் கதாநாயகனாகவும்,  ‘அராத்து’ எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாகவும்,  ‘தாத்தா காரை தொடாதே’ எனும் படத்தை இயக்கியும் உள்ளேன். 

இந்த ‘சூப்பர் பொண்ணு; சுமாரான பையன்’ எனது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாகும்.  இந்தப் படத்தை  ஒரு கமர்ஷியல் கதையாக  உருவாக்கி உள்ளேன்.

ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை மையமாக கொண்ட கதை. என் தந்தையாக நடிகர் மாரிமுத்து நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் செந்தில், நடிகை ஷகிலா ஆகியோர் நடிக்கிறார்கள். 

ஜனவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கி  தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த உள்ளோம்…” என்றார்.