யோகிபாபு-வின் ’தர்ம பிரபு’ படத்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட்!

0
226

நடிகர் யோகிபாபுவின்  நடிப்பில், இயக்குநர் முத்துக்குமரனின்  இயக்கத்தில், தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கும் படம் ‘தர்மபிரபு’. எமலோகம் பற்றிய கதையில் நகைச்சுவை கலந்து உருவாகிறது இத்திரைப்படம். படத்தில் மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், ‘போஸ்’ வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத்தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்குநர் – பாலசந்தர், பாடல்கள் – யுகபாரதி, இசை – ஜஸ்டின் பிரபாகரன், தயாரிப்பு – P. ரங்கநாதன், தயாரிப்பு மேற்பார்வை – ராஜா செந்தில். இயக்கம் – முத்துகுமரன்.  தற்போது, இப் படத்திற்காக AVM ஸ்டூடியோவில் 2 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான செலவில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்வகையில் இந்தப் படப்பிடிப்புத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சொர்க்கத்திற்கென்றே தனியாக இன்னொரு படப்பிடிப்புத் தளமும் அமைக்கப்படவுள்ளது.

இந்தத் தளம் அமைப்பதற்கு கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் உழைத்து வருகிறார்கள்.

வரும் டிசம்பர் 14-ம் தேதி  இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார்.  அதற்காக பிரம்மாண்டமான நடன அரங்கமும் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.