நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது ‘வட சென்னை’ படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் கேரம் போர்ட் பிளேயராக அன்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் உலக சேம்பியனாக வேண்டும் என்பது இவருடைய கனவு. இந்த படத்தில் 15 வயது முதல் 30 வயது வரை அன்பு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். வரும் 17ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியவை :
வெற்றி மாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை அடுத்து நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தில் சேர இருக்கிறோம். ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. வரும் 17ம் தேதி வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். படத்தில் அமீர் சார் வேற லெவல நடிச்சிருக்கார். என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உடன் நடித்த ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,மற்றும் அனைவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. சந்தோஷ் நாராயணன் பெரிய இசை படத்திற்கு பிளஸ். பாடல் அனைத்தும் அருமையாக உள்ளது .வேல்ராஜ் ராஜ் சார் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இரவு பகல் பாராமல் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.
இயக்குனர் வெற்றிமாறன் பேசியது…
படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சிகளும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளி வரும்.. அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார். அவரின் பேச்சு.. நடிப்பு , நடை. என அசத்தியுள்ளார். கலை இயக்குனர் ஜாக்கிங் ஜெயில் செட் மற்றும் வடசென்னை சட்டை மிகப் பிரமாதமாக செய்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றி. படத்தில் நடித்த ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி பவன் , சமுத்திரகனி கிஷோர் அற்புதமாக நடித்துள்ளார்கள்,. மேலும் அமீர், சமுத்திரகனி ஒரு இயக்குனர்களாக எனக்கு சிறிது உறுதுணையாக இருந்தார்கள்.. படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியவை..
இந்த படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி மேடையை பார்க்கும்போது காக்கா முட்டை படத்தில் நடந்த விழா ஒன்று ஞாபகம் வருகிறது. இந்த படத்தில் ஒரு இனிமையான கதாபாத்திரம் நடித்துள்ளேன். தனுஷ் அவர்களுடன் முதல் முதலாக ஜோடியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. படத்தின் முதல் சீனில் பார்த்தவுடன் என்னை லவ் பண்ணுவார் தனுஷ் . படத்தில் அனைவருமே நன்றாக. நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அருமையாக வந்துள்ளது.. படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகை ஆண்ட்ரியா பேசியது:
படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி .இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் .சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன் இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார் பேசினார்.
நடிகர் மற்றும் இயக்குனரான அமீர் பேசியவை…
வடசென்னை படத்தை பார்த்தேன் ஒரு ரசிகனாக. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தனுஷ் அவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.வெற்றிமாறன் ஒரு தரமான படத்தினை இயக்கி உள்ளார்.ஆண்ட்ரியா தரமணி போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருக்கிறோம் .இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவருமே மிகவும் அருமையாக நடித்துள்ளனர் இந்த படத்தின். சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன் மீண்டும்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியவை
இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மாதிரி படங்கள் வெற்றிமாறனால் மட்டுமே இயக்க முடியும் .படத்தில் தனுஷ் அவர்கள் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, திறமையான நடிகர். வெற்றிமாறன் அவர்களுடன் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ் .என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகை ஆண்ட்ரியா பேசியது:
‘படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் .சக்சஸ் மீட்டில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்’ இவ்வாறு ஆண்ட்ரியா பேசினார்.
நடிகர் பவன் பேசியவை…
படத்திற்கு A சென்சார் சர்டிபிகேட் வந்துள்ளதாக இயக்குனர் கூறினார் .எந்த காட்சியுமே கட், ஆகாமல் வந்துள்ளது.
நடிகர் டேனியல் பாலாஜி பேசியவை:
பொல்லாதவன் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து உள்ளேன் .வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி .ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு தந்துள்ளார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்