‘சண்டக்கோழி-2’ குடும்ப பிளாக் பஸ்டர் படம் – நடிகை வரலட்சுமி தகவல்!

விஷால் தயாரித்து நடித்து வரும் ‘சண்டக்கோழி 2’ படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லியாக வரலட்சுமி நடித்திருக்கிறார். ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.  யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வரும் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடித்தது குறித்து கூறிய நடிகை வரலட்சுமி, “சண்டக்கோழி 2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2  -வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியே வந்து நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல், காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம்.

கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது.” என்றார்.