ஜெயம் ரவி – ராஷி கண்ணா நடித்துள்ள அடங்க மறு, பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிக்க புகழ்பெற்ற படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ஆல்பம் மற்றும் ப்ரோமோ காட்சிகள் பெரும் வெற்றியை பெற்று அனைவரையும் கவர்ந்திருப்பதே இதற்கு சாட்சி. இந்நிலையில், கிளாப் போர்ட் புரொடக்சன்ஸ் V. சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமைகளை பெற்றிருப்பது, படத்தை கொண்டாட மேலும் ஒரு வலுவான காரணமாக அமைந்துள்ளது.

சீட்டின் நுனிக்கே வர வைக்கும், துரத்தல் வகை த்ரில்லர் படங்கள் புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான விஷயங்களால் ரசிகர்களை கவர தவறுவதே இல்லை. இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ படமும் அந்த வகையிலான ஒரு படம் தான். அதிரடியான சண்டைக்காட்சிகள், யதார்த்தமான அரங்க அமைப்பு மற்றும் மிகச்சிறந்த நடிகர்கள் மூலம் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இதன் மூலம் இப்போது சினிமா வட்டாரத்தில் வர்த்தகர்களின் ஃபேவரைட் படமாக மாறியிருக்கிறது.
ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாளராக பணிபுரிய, சமீபத்திய சென்சேஷன் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் (ஒளிப்பதிவு), ரூபன் (படத்தொகுப்பு), லால்குடி என் இளையராஜா (கலை), விஜி (வசனம்), ஸ்டன் சிவா (சண்டைப்பயிற்சி), தினேஷ் (நடனம்) மற்றும் ஜே.கவிதா (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.
சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
Related posts:
65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகள்!April 14, 2018
நடிகர் நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும் ‘ஆண்டவன் அவதாரம்’ !!October 14, 2024
'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது !August 14, 2023
ராட்சசன் எங்களின் வெற்றி மட்டுமல்ல, ரசிகர்களின் வெற்றி! - விஷ்ணு விஷால்October 15, 2018
நடிகர் விஷாலுக்கு ஆதரவாக வெளியான நீதிமன்றத்தின் தீர்ப்பு! ஆதரவான தீர்ப்பால் மகிழ்ச்சி!!June 15, 2023