வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு – சீறும் புலிகள்

0
265

விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில், அவர் வேடத்தில் நடிப்பதற்கான நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டார். இதையடுத்து, பல ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

தமிழீழ விடுதலைக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை, ‘சீறும் புலிகள்’ என்ற பெயரில் ஸ்டுடியோ 18 நிறுவனம் திரைப்படமாக உருவாக்கி வருகிறது. இதில் பிரபாகரன் வேடத்தில் நடிக்க அவருடைய முகசாயலில் உள்ள கம்பீரமான நடிகரை தயாரிப்பு நிறுவனம் தேடியது. ஆனால் அதுபோன்ற நபரை அவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் பல நாட்கள் தேடலுக்கு பிறகு பிரபாகரன் வேடத்தில் நடிக்க பொறுத்தமான நபரை தேர்ந்தெடுத்துள்ளதாக ஸ்டுடியோ 18 நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.