சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தயாரிக்கிறது ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ்!

0
567

சைக்கலாஜிக்கல் திரில்லர் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு உண்டு. ரசிகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை கட்டிபோடும் சிறப்பம்ச gvம் இந்த வகை திரில்லர் படங்களுக்கு உண்டு. மேலும் ரசிகர்கள் மனதில் ஒரு அழுத்தத்தையும், சில நேரங்களில் பயத்தையும் உண்டாக்கும். பெரும் வரவேற்பு இருப்பதாலேயே இந்த வகை படங்களை கொடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வமாக உள்ளனர். இந்த வரிசையில் கேஆர் சந்துரு இயக்கத்தில் தீரஜ், துஷாரா நடிப்பில் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தயாரிக்கிறது ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் சாகர் இது பற்றி கூறும்போது, “இந்த கதையை கேட்ட உடனேயே எனக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை பிடித்து போக காரணம் இருக்கும். என்னுடைய விஷயத்தில் நான் சைக்கலாஜிக்கல் திரில்லர் படங்களின் தீவிர ரசிகன், ஒரு படம் தவறாமல் எல்லா படங்களையும் பார்த்து விடுவேன். இயக்குனர் சந்துரு என்னிடம் இந்த கதையை வந்து சொன்னபோது, மற்றவர்கள் பார்க்கும் முன்னரே இந்த படத்தை நான் பார்த்த மாதிரி பெருமையாக உணர்ந்தேன். ஒரு ரசிகனாக இந்த கதையை கேட்டபோது, எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார் இயக்குனர். இந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் வகை படங்கள் எடுக்கும்போது, கொஞ்சம் விலகினாலும் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகும் ஆபத்து இருக்கிறது. ஆனால், இயக்குனர் சந்துரு அவற்றை எல்லாம் மிக கவனமாக கையாண்டு இருக்கிறார்” என்றார்.

பிரதாயினி, மீரா மிதுன், ராதாரவி, அஜய், சுரேகா வாணி, ஆசிக், லிஸி, செந்தில் குமரன், சரத், ராஜலக்‌ஷ்மி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கேபி இசையமைக்க, சாபு ஜோசஃப் எடிட்டிங் செய்திருக்கிறார். பூர்ணிமா ராமசாமி (ஆடை வடிவமைப்பு), கதிர் நடராசன் (திரைக்கதை), மகா முருகன் (கலை), லினிஷ் பிரசாத் (நிர்வாக தயாரிப்பு), சின்னமணூர் சதீஷ்குமார், எஸ்பி சுரேஷ் (ஸ்டில்ஸ்), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிகிறார்கள்.