“சுய் தாகா” படத்திற்காக மேக்கப் இல்லாமல் 20 நிமிடத்தில் படப்பிடிப்புக்கு தயாரான நடிகை அனுஷ்கா ஷர்மா !

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந் துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும்  படவரிசையில் இப்படம் அமைந்துள் ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர்  சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார். அனுஷ்காவின் கதாபாத்திரம் ஒரு எளிமையான பெண் தன் சொந்த தொழில் மூலமாக முன்னேறு கிறார் என்ற கருத்தினை கொண்டது.நடிகர் வருண் தவான் மௌஜி என்ற கதாபாத்திர பெயரிலும் ,அவருக்கு மனைவியாக மம்தா என்ற கதாபாத்திர பெயரில் அனுஷ்கா நடித்துள்ளார்.
“பன்முக திறமையுள்ள நடிகை அனுஷ்கா ஷர்மா அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்த சுய் தாகா படத்திற்காக மேக்கப் செய்யாமல் தயாராகியுள்ளார்.படத்தில் ஒரு அமைதியான மற்றும் எளிமையான கைத்தறி தொழில் செய்யும் பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார் ” என ஆடை வடிவமைப்பு இயக்குனர் தர்சன் தெரிவித்துள்ளார்.
‘இந்த படத்தின் ட்ரைலரை பார்த்தேன்.என் காதாபாத்திரத்தின் தோற்றம் மிகவும் அருமையாக இருந்தது.இதற்க்கு எல்லாம் காரணம் ஆடை வடிவமைப்பாளர் தர்சன் மற்றும் மேக்கப் கலைஞர் கள் தான்.மேக்கப் இல்லாமல் படப்பிடிப்பிற்கு தயாராக எனக்கு 20 நிமிடங்கள் தேவைப்பட்டது.” என அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.
‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.