இந்தியாவிலுள்ள கைவினை கலைஞர்களை சந்திக்க இருக்கும் வருண்-அனுஷ்கா ஷர்மா ! “சுய் தாகா – மேட் இன் இந்தியா ” பட புரொமோஷன்

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் சிறந்தபடமான சுய் தாகா படத்தில் நடிகர் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர்  மௌஜி மற்றும் மம்தா எனும் கதா பாத்திர பெயர்களில் நடித்துள்ளனர். அனுஷ்கா ஷர்மா, நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் பட வரிசை யில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

இந்தப் படம் முழுக்க முழுக்க சொந்தமாய் யாரையும் சார்ந்து இருக்காமல் நம் உழைப்பால் முன்னேறலாம் என்ற கருத்தினைக் கொண்ட படமாக அமைந்துள்ளது. மேலும் மகாத்மா காந்தி அவர்களின் வழியைப் பின்பற்றும் வகையில், நாம் பயன் படுத்தும் பொருட்கள் நம் நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற செய்தியையும் தெரிவிக்கிறது. இந்தப் படத்தில் வருண் தவான் டெய்லராகவும், அனுஷ்கா ஷர்மா தையல்கலை நிபுணர் வேடத்திலும் நடித்துள்ளார்கள்.

‘‘கண்டிப்பாக இந்தப் படம் அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையும். சுயமாகத் தொழில் செய்து யாரையும் நம்பி வாழாமல் நம்மால் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைக்கும் படமாக அமையும். இப்படத்தின் மூலம் நாங்கள் இந்தியாவிலுள்ள கைத்தறி கலைஞர்களை சந்திக்க இருப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம்.இன்னும் பல கைவினை கலைஞர்கள் திறமைகள் வெளி வர வேண்டும் என ஆசைப்படுகிறோம்’’ என்கிறார் நாயகி அனுஷ்கா ஷர்மா.

‘‘வருண் தவான், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மிகவும் திறமைசாலியான நடிகர்கள். இந்தப் படத்தின் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர். இது எங்கள் கனவுப் படம்.  இந்தப் படத்தை தயாரித்ததற்காக பெருமைப்படுகிறோம்’’ என்கிறார் தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா.

“நம் நாட்டிலுள்ள இளம் கைவினை கலைஞர்களை சந்திக்க வேண்டி ஆசைப் படுகிறேன்.அவர்களின் திறமைகளும் , வித்யாசமான தொழில் நுட்பத்தையும் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன் “என நடிகர் வருண் தவான் கூறியுள்ளார்.

‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.