தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் வரிசையில் மிகவும் முக்கிய மானவரான இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைப்பதோடு, பின்னணி இசை மூலம் பாராட்டும் பெற்று வருகிறார்கள். ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று தொடர்ந்து தனது வித்தியாசமான இசை மூலம் ரசிகர்களை கவர்ந்து அவரும் அவரது இசையில் உருவாகி வரும் மற்றொரு வித்தியாசமான படம் ‘வஞ்சகர் உலகம்’.
வித்தியாசமான கேங்ஸ்டர் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் ஒன்றை யுவன் சங்கர் ராஜா, பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த சாம் சி.எஸ், தனது எண்ணத்தை யுவனிடன் சொல்ல, அவரும் உடனே ஓகே சொல்லி, பாடலையும் பாடிக் கொடுத்து விட்டார்.
ரொமாண்டிக் டூயட் பாடலான அந்த பாடல் யுவனின் காந்தக் குரலாலும், சாம் சி.எஸ்-ன் வசீகரிக்கும் இசையாலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் வெளியாக உள்ள அப்பாடல் நிச்சயம் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது