“ யாளி “ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “ அக்ஷயா”

AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “..  இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  அக்ஷயா.B .. இவர் ஆரியா நடித்த கலாபக்காதலன், விஜயகாந்த் நடித்த  “ எங்கள் ஆசான், டாக்டர் கலைஞர் கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறியதாவது..

பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நாம் இணைந்துள்ளேன்.  இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.                                    

முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி ( அக்ஷயா ),நாயகன்(தமன் )இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா ( அர்ஜுன் ) என்ற கதாபாத்திரம் ஜனனியை பின்தொடர்கிறார். யார் அவர் எதற்காக ஜனனியை பின் தொடர்கிறார், அந்த நேரத்தில் மும்பையில் தொடர் கொலை சம்பவங்கள் வேறு  நடக்கின்றன. அந்த கொலை சம்பவங்களுக்கும் இந்த மூன்று கதா பாத்திரத்திரங்களுக்கும் என்ன தொடர்பு இறுதியில் ஜனனி என்ன ஆனார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். 

விறு விருப்பான திரைக்கதை ரசிக்கும்படியாக இருக்கும். படப்பிடிப்பு மும்பை, மலேசியா, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது, ஜூன் மாதம் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ஜூலை மாதம் படம்  திரைக்கு வர உள்ளது என்கிறார் அக்ஷயா.

ஒளிப்பதிவு     –      V.K.ராமராஜு

இசை            –     SR.ராம்

பாடல்கள்       –     கவிப்பேரரசு வைரமுத்து,

                        கவிதாவாணி V.லக்ஷ்மி

எடிட்டிங்              –     அஹமது,சந்துரு

மக்கள் தொடர்பு      –     மணவை புவன்.    

இணை இயக்கம்     –      உன்னி பிரணவம்

இணை தயாரிப்பு     –     கவிதாவாணி V.லக்ஷ்மி

தயாரிப்பு          –    பாலச்சந்தர்.T