ஆக்‌ஷன் ரோலில் மிரட்ட தயாரான நிகிஷா!

தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’  படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’  படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா. இப்படத்தில் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார். 
 
படத்தின் கதை குறித்து நிகிஷா கூறுகையில், ‘நான் ஒரு குத்துசண்டை வீராங்கனை, எனக்கு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறவுள்ளது. தற்போது கமிட் ஆகியுள்ள இப்படத்தில் முழு ஆக்‌ஷன் ரோலில் மிரட்டவுள்ளேன். இனி வரும் காலங்களிலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படங்களிலே களமிறங்கவிருக்கிறேன்’ என தில்லாக கூறுகிறார் நிகிஷா.