இமான் ரிலீஸ் செய்த ‘ ஜெயிக்க போவது யாரு? ஆடியோ!

0
291

டிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் “ ஜெயிக்க போவது யாரு “ இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார். மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் – சக்தி ஸ்காட்.  இசை   –  சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின்.

படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது…

கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார்.

இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன். இதுவரை ஒரு படம் எடுப்பதற்கான 15 துறைகளையும் ஒரே ஒரு மனிதன் ஜாக்கிசான் அவர்கள் “ ஜோடியாக் “ என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012 ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார்.

அதற்கு பிறகு நான் 29 துறைகளில் பணியாற்றி இந்த படத்தை முடித்துள்ளேன்.  இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையும்  இடம்பெறும் என்று நம்பிக்கையுடம் கூறுகிறார் இயக்குனர் சக்திஸ்காட். இந்த படத்தின் இசையை நூறு படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் வெளியிட்டார்.

படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.​