கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் படத்தை கைப்பற்றி வரும் சன் குழுமம்!

கொஞ்சம் காலம் கோலிவுட்டைக் கண்டு கொள்ளாமல் இருந்த சன் குழுமம் ரீசண்டாக  பல முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி குவித்து வருகிறது . ப்மோன்ம்  நயன்தாராவின் ‘அறம்’, பிரபு தேவாவின் ‘குலேபகாவலி’, சந்தானத்தின் ‘மன்னவன் வந்தானடி’, சிபிராஜின் ‘சத்யா’, ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’, விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’, சூர்யாவின் ‘சி 3’ & ‘தானா சேர்ந்த கூட்டம்’, சிவகார்த்திகேயனின் 2 புதிய படங்கள், அஜித்தின் ‘விவேகம்’ ஆகிய படங்களின் சேட்டிலைட் ரைட்ஸை கைப்பற்றியது ‘சன் டிவி’.

இதனிடையே  அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. இதன் தொலைக்காட்சி உரிமைக்கு அதிக விலை கோரியதால் விற்கப்படாமல் இருந்தது. அப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது. தற்போது தயாரிப்பாளர் தாணுவிடமிருந்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ மற்றும் ‘தெறி’ ஆகிய படங்களின் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருக்கிறது.

மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் ‘ஸ்பைடர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் சன் தொலைக்காட்சி பெரும் விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இவைதவிர ‘விவேகம்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சத்யா’, ‘அறம்’, ‘குலேபகாவலி’, ‘சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன்’ மற்றும் ‘சிவகார்த்திகேயன் – பொன்ராம்’ ஆகிய படங்களின் உரிமையையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.