சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படம்தான் ‘அறம்’

பெண் சமத்துவம் என்பதை வெறும் பேச்சில் மட்டுமே கொண்டுள்ள பல துறைகள்  இருக்கும் இக்காலத்தில், அதனை நடைமுறையிலும் செயலாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா துறை. மிக வலுவான முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அறம்’ படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும். இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ்,  பிரம்மாண்ட  விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் தமிழகமெங்கும் பல திரையரங்கங்களில் எழுப்பப்படவுள்ளன. ” ‘அறம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது.
நயன்தாரா வின் பெரிய மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான விளம்பர யுக்திகளை கையாள்வதே சரி”  என்கிறார்  ‘KJR ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் J கொட்டப்படி. தென்னிந்திய சினிமாவில்  பெண் கதாபாத்திரத்தை  மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் இது ஒரு மிக முக்கிய படமாக கருதப்படுகிறது. KJR ஸ்டுடியோஸும் ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்களும் இணைந்து  இப்படத்திற்கான மேலும் பல பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை திட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தைய வெற்றி படங்களில் பல படங்களை வெளியிட்டது ‘Trident Arts’ ரவீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.  ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில்,ஆண்டனியின் படத்தொகுப்பில், ஜிப்ரானின் இசையில் ‘அறம்’ உருவாகியுள்ளது.
அடிசினல் நியூஸ்:
தாங்கள் ஒதுக்கப்பட்டதுக்காகவும், புறக்கணிக்கப்பட்டதற்காகவும் நினைத்து தற்போது  கொந்தளித்தும் கொண்டிருக்கும்  தமிழக மக்களின் பொதுவான அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் படமாக ‘அறம்’ உருவாகியுள்ளது. இந்த காரணத்திற்காகவே, நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ‘அறம்’ படத்திற்கு மக்கள் இடையேயும் விநியோகஸ்தர்கள் இடையேயும்  பெரும் எதிர்பார்ப்பும் ஆதரவும் உருவாகியுள்ளது. இப்படத்தில்  மாவட்ட ஆட்சியாளராக அசத்தி உள்ளதாக கூறப்படும் நயன்தாரா நடித்திருக்கும் இப்படம் சமுதாய பிரச்சனைகளை பற்றி வெறுமனே வாய் பேச்சில் அலசி கொண்டிருக்காமல் , சில பல செயல் திட்டங்களையும் அலசி உள்ளதாம்.
அதாவது ஒரு  படம் வெற்றி பெற பல்வேறு யுத்திகள் பிரயோகிக்க படும் இந்தக் கால கட்டத்தில் , பெரிய பின்பலம் இல்லாமல்  சமுதாயத்துக்கு உதவும் ஒரு அரிய கண்டு பிடிப்பை செய்யும் திறமை சாலிகளுக்கு அவர்களது ஆராய்ச்சி மேம்பட செய்யும் முயற்சிகளுக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் துணை நிற்கும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.
இதற்காக அணுக வேண்டிய தொடர்பு: facebook : KJRStudios
Twitter: @KJR_Studios