உதவி கேட்க / உதவி செய்ய ஒரு புது ஆப்! – இது ஒரு விஷால் தயாரிப்பு

தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான் விஷால் ஏற்கனவே நடிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலருக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவி செய்து வருகிறார் என்பது சகல்ருக்கும் தெரிந்த செய்திதான். இந்த நிலையில் அவரும் அவருடைய நண்பர்களும் இணைந்து ‘V Shall’ என்ற அப்ளிகேசனை உருவாக்கியுள்ளனர். இந்த அப்ளிகேசன் எதர்கு தெரியுமோ? உதவி தேவைப்படும் மற்றும் உதவும் குணம் சகலரையும் ஒன்று சேர்க்கும் வகையில் இந்த ஆப் உருவாகிறதாம். இந்த அப்ளிகேசன் மூலம் உண்மையாக உதவி தேவைப்படுபவர்களும், உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவவோ, உதவி பெறவோ செய்யலாம். இந்த அப்ளிகேசன் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது மேலும் இந்த ஆப் குறித்து விஷால் வீடியோ வடிவில் விளக்கியுள்ளார்.

அதில், “அனைவருக்கும் வணக்கம். பொதுவாகவே ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பார்ப்பது அல்லது செல்ஃபி எடுக்க பயன்படுத்துவோம். ஆனால், அதைத் தாண்டி ஸ்மார்ட் போன் மூலமாக நிறைய தெரியாத நபர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்பு.

சமூக சேவை மூலமாக அதைச் செய்ய முடியும். இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் மொபைல் செயலி இருக்கிறது. மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என எது வாங்க வேண்டுமானாலும் மொபைல் செயலி இருக்கும் போது, சமூக சேவைக்கு ஏன் இருக்கக் கூடாது என தோன்றியது. இதற்காக சுமார் ஒன்றரை வருடங்கள் நண்பர்களோடு சேர்ந்து, இச்செயலி விஷயங்களில் ஈடுபட்டு வந்தோம். அது தான் ‘V Shall’ செயலி.

உலகத்திலேயே முதல் சமூகசேவை செயலியாக இது உருவாகியுள்ளது. நிறையப் பேர் வீட்டில் பழைய துணிகளோ, குழந்தையின் பிறந்த நாளுக்கு அன்னதானம் உள்ளிட்டவற்றை எப்படி செய்யலாம் என்ற கேள்வி இருக்கும். அந்த சமயத்தில் இச்செயலி உதவியாக இருக்கும். முக்கியமாக கல்வி, மருத்துவம், சாப்பாடு என நிறையப் பிரிவுகளை வைத்திருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் பண வசதியின்றி படிக்க முடியாமல் இருப்பவர்கள், இந்த செயலியில் பதிவு செய்யலாம். இதில் வரும் அனைத்து கோரிக்கைகளுமே சரிபார்த்துதான் வரும். இதில் எந்ததொரு தவறான பதிவுமே இடம்பெறாது. அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிணைப்பதே ‘V Shall’ செயலியின் முதல் பணி.

தொலைபேசியில் இருக்கும் ஒரு பட்டன் மூலமாக, மற்றொருவரின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு. ‘V Shall’ செயலியின் முதல் குறிக்கோள் என்னவென்றால் உதவி வேண்டும் என்பவர்களையும், உதவி செய்ய வேண்டும் என்பவர்களையும் ஒன்றாக சேர்க்கிற ஒரு பாலம். அது தான் இச்செயலியின் முதல் முயற்சி. கண்டிப்பாக இச்செயலியின் மூலம் பலரது வாழ்க்கையை மாற்ற முடியும் என்று நம்புகிறோம்.

முடிந்த அளவுக்கு இன்று கல்வி உதவி செய்யும் போது, நிறைய விஷயங்கள் பார்வைக்கு வராது. உதாரணமாக ஒருவர் 1170 மதிப்பெண் வாங்கி, பணமின்றி கல்லூரி சீட் கிடைக்காமல் போய்விட்டது. இந்த மாதிரி கோரிக்கைகள் அனைத்துமே ‘V Shall’ செயலி மூலம் நிறைவேறும். இதற்காக மட்டுமே இச்செயலி தொடங்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இதன் மூலம் பலரது வாழ்க்கை மாற்றியமைக்கப்படும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=p55xAcljYQ