சென்னை சர்வதேச திரைப்பட விழா – தமிழ் திரைப்படங்களுக்கான போட்டி அறிவிப்பு..!

நம் சிங்காரச் சென்னையில் ஆண்டுதோறும்  தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்தாண்டும் வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை யிலும் நடைபெறவிருக்கிறது. ICAF என்கிற Indo Cine Appreciation Foundation என்கிற அமைப்பின் சார்பில் இந்த விழா நடைபெற்று வருகிறது. இதில் சென்ற ஆண்டு பல உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு கொண்ட பல்வேறு நாட்டு திரைப்படங்களும் திரையிடப்படும்.

இந்த விழாவிலேயே தமிழில் சிறந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான போட்டி அறிவிப்பினை அவ்வமைப்பு  வெளியிட்டுள்ளது.  கடந்தாண்டு  அதாவது 2016 அக்டோபர் 16-ம் தேதிக்கு பின்பும், இந்தாண்டு, 2017 அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்கு முன்பாகவும் சென்சார் சான்றிதழ் பெற்ற நேரடி தமிழ்த் திரைப்படங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

போட்டிக்கான விண்ணப்பம் www.icaf.in என்கிற இந்த அமைப்பின் இணையத்தள முகவரியில் கிடைக்கும். டவுன்லோடு செய்து இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நேரில் பெற வேண்டுமெனில் Indo Cine Appreciation Foundation Office , No.4, 2nd Floor, E-Block, Gemini Parsn Apartments, Cathedral Garden Road, Chennai – 600 006. என்கிற முகவரிக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் இரண்டு டிவிடிக்கள் ஆங்கில சப்டைட்டில் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

அமைப்பின் தொலைபேசி எண்கள் +914428212652

மின்னஞ்சல் முகவரி – [email protected].

விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி நவம்பர் 10, 2017.