இப்போதெல்லாம் ஒரு சினிமா எடுக்க கதை எதை தெர்ந்தெடுப்பது என்பது ரெண்டாவது விஷயம் தான். முதலில் அந்தப் படத்திற்கு டைட்டில் என்ன என்று முடிவு செய்வதிலேயே ஆண்டு கணக்கில் எடுத்து கொள்ளும் தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் கோலிவுட்டில் அதிகரித்து விட்டார்கள். இதனிடையே இன்றளவும் ரஜினி படத்தின் டைட்டில் கிடைத்தாலே ரசிகர்களிடம் எளிதில் ரீச்சாகி விடும் என்று ஆசைப் படுவோர் அல்லது ஏங்கோர் பலருண்டு.. ஆனால் சகசம் படத்தை தொடர்ந்து நம்ம பிரசாந்த் நடித்து வரும் புதிய படத்திற்கு ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படமான ‘ஜானி’ படத்தின் டைட்டிலை கேட்டு வாங்கி வைத்துள்ளதாலேயே படத்துக்கு மவுசு அதிகரித்து உள்ளதாம் ..
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்தப்படத்தை ஆர்.வெற்றிச்செல்வன் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஜீவா சங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர். படத்தின் கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபு, ஆனந்தராஜ், சாயாஜி ஷிண்டே, அஷுதோஷ் ராணா உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் உள்ளனர்.
இந்தப்படத்திற்கு மூன்று புது இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள்.. அவர்கள் யார் என்பதை இசைவெளியீட்டு விழா நடக்கும் வரை சஸ்பென்சாக வைத்துள்ளார்கள். இதுவரை மூன்றுகட்டமாக 77 நாட்கள் படப்படிப்பு நடத்தி டப்பிங்கையும் முடித்துவிட்டார்கள்.. இனி பாடல் காட்சிகளை மட்டும் படமாக்கவேண்டியதுதான் பாக்கி. பாடல் காட்சிகாலை கனடாவிலும் மொரிஷியஸ் தீவுகளிலும் எடுக்க இருக்கிறார்களாம்