ஸ்கெட்ச் ஷூட்டிங் முடிந்தது!

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு மற்றும் மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `ஸ்கெட்ச்’. விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா இணைந்து நடிக்கும் இப்படம் வடசென்னை பின்னணியில் ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவிகி‌ஷன், விஷ்வாந்த், மாலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தமன் இசையமைக்கும் இப்படத்தின் படிப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். படத்தில் இருந்து ஒரே ஒரு பாடல் மட்டும் ரிலீசாகி இருக்கும் நிலையில், மற்ற பாடல்கள் மீதான எதிர்பார்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்க இருக்கிறது. படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `ஸ்கெட்ச்’ படத்தை முடித்த விக்ரம் `துருவ நட்சத்திரம்’ படத்தின் மீதமிருக்கும் காட்சிக்காக பங்கேற்க உள்ளார். அதேநேரத்தில் ஹரி இயக்கத்தில் `சாமி 2′ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பித்தக்கது.