பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளையும் கவரும் ‘ மரகத நாணயம்’

மரகத நாணயம் என்பதை விட ஆர்வத்தை தூண்டும் ஒரு தமிழ் படத்தலைப்பு இருக்க முடியாது. இந்த சாகசம் மற்றும் காமெடி கலந்த கற்பனைத் திரைப்படம் நல்ல பல திறமையான நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆதி, நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்க அவர்களுடன் ஆனந்த் ராஜ், டேனியல், ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ் என திறமையான நடிகர்ளும் நடிக்கிறார்கள். நல்ல கதை, திரைக்கதை என உள்ளடக்கம் தான் ஹீரோ என்பதை நம்பும் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி டில்லி பாபு தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கியிருக்கிறார்.

படத்தின் நாயகியும், முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இளம் நாயகியுமான நிக்கி கல்ராணி கூறும்போது, “மரகத நாணயம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். சிறு வயதிலிருந்தே நான் விரும்பி, ரசித்து பார்க்கும் ஃபேண்டஸி வகைப் படங்களில் நானும் நடித்திருக்கிறேன் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், வானத்தில் பறப்பது போலவும் உணர்கிறேன். என் கதாப்பாத்திரம் மிகவும் புதுமையாக இருக்கும். நல்ல திரைக்கதை மற்றும் கதை சொல்லலுடன் சிறப்பாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ரசிப்பதோடு, அவர்களின் பாராட்டு மற்றும் ஆதரவையும் மரகத நாணயம் படக்குழுவுக்கு வழங்குவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

 

இப்படத்தை இயக்கியது குறித்து ”செய்தி தாள் ஒன்றில் நான் படித்த சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவே மரகத நாயாயத்தின் தொடக்க புள்ளியாகும் . பிறகு நான் அதில் சில சுவாரஸ்யமான சம்பவங்களை இணைத்தேன் . இப்படம் பெரியவர்களுக்கு மட்டும் இன்றி குழந்தைகளையும் கவரும் என்பதில் உறுதியாக உள்ளேன்.இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் என்னை ஆச்சிரியப்படுத்தியது.

.இப்படத்தின் தூணாக இருந்தது எங்களது தயாரிப்பாளர் திரு.டில்லி பாபு அவர்கள்.அவர் கொடுத்த ஊக்கமும் சுதந்திரமும் வார்த்தையில் அடங்காதவை.இக்கதையில் சில சுவாரஸ்யமான மர்ம முடிச்சுகள் உள்ளன . அதில் நீக்கி கல்ராணி மற்றும் அருண்ராஜ் காமராஜின் கதாபாத்திரங்களும் அடங்கும் என்பது கூடுதல் தகவல் ” என நம் எல்லோரின் ஸ்வாரஸ்யத்தையும் கூட்டினார் புது முக இயக்குனர் ARK சரவண் .