பாகுபலி-2க்கு தடை கோரிய வழக்கில் இருதரப்பும் சமாதானம் ஆனதால் படத்திற்கான சிக்கல் தீர்ந்ததோடு, படம் ரிலீஸாவதற்கான தடை நீங்கியது. இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமாண்ட படம் ‛பாகுபலி-2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் ரிலீஸாக இருக்கிறது.
உலகம் முழுக்க சுமார் 5000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் வெளியிடுகிறது.இந்நிலையில் பாகுபலி 2 படத்தை வெளியிட தடை கோரி ஏசிஇ நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தது. அதில், ஸ்ரீகிரீன் புரொடக்ஷ்ன் நிறுவனத்தின் சரவணன் என்பவர் பாகுபலி-2 படத்திற்காக தன்னிடம் ரூ.1.8 கோடி கடன் வாங்கியிருந்தாகவும், படம் வெளியீட்டிற்கு முன்பாக ரூ.10 லட்சம் சேர்த்து மொத்த பணத்தையும் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சிக்கிறார். ஆகவே, எங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாவிடில் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்தவாரம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, படத்திற்கு தடை விதிக்க முடியாது, இதுதொடர்பாக விநியோகஸ்தர் சரவணன் வருகிற 18-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி, வழக்கை ஏப்., 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரும் பேசி சமாதானம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதோடு பட ரிலீஸில் இருந்த சிக்கலும் தீர்ந்தது .இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு இந்த பிரச்சனை சுமுகமாக தீர்த்து வைத்தது.
Related posts:
எந்த மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்… -'கள்ளன்' இயக்குனர் சந்திரா தங்கராஜ்.December 15, 2021
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் ...April 7, 2022
நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு ஒய்வு பெற போகிறாரா! பார்லிமெண்ட் தேர்தல் தான்...June 11, 2023
குருப் - திரை விமர்சனம் !November 13, 2021
டீமன் திரை விமர்சனம் !!September 23, 2023