ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகி, சமூக வலைத்தளங்களை பரபரப்புக்கு ஆளாக்கியது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர். படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை யடுத்து, இப்படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ‘நாச்சியார்’ என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க விருக்கிறாராம். முழுக்க முழுக்க அவரை மையப்படுத்தியே இந்த கதை நகரவுள்ளதாம்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விரைவில், இப்படத்தில் நடிக்கவுள்ள மேலும் நடிகர், நடிகையர் விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.
Related posts:
மலையாள இயக்குநருடன் கை கோர்க்கும் பிரபுதேவா, மீண்டும் களமிறங்கும் வேதிகா!June 3, 2023
அமேசான் ப்ரைம் ம்யூசிக் புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது.July 3, 2020
பெண் பத்திரிகையாளர்களை சந்தித்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்த நடிகர் டிஎஸ்ஜி!March 6, 2024
V4 எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது வழங்கிய நிகழ்ச்சி ஆல்பம்!January 3, 2019
'தாமிரபரணி' படக்கூட்டணி இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது!July 15, 2023